குழந்தை நீதி கதைகள்: நெருப்புடா நெருங்குடா பாப்போம்!- மின்மினி பூச்சியும் காகமும்
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், மறுபடியும் காக்கா -வ வெச்சு ஒரு கதை ரெடி பண்ணிருக்கேன் சொல்லட்டுமா, அதுக்கு முன்னாடி நா ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க. நீங்க யாரையும் உடல் ரீதியா கிண்டல் பண்ண கூடாது. உடல் பலம் மட்டும் போதாது. மனோபலமும் வேணும்னு தெரிஞ்சுக்கோங்க. சரி வாங்க கதைக்குள்ள போகலாம்.

ஒரு அடர்ந்த காட்டில் மின்மினி பூச்சி ஒன்று வாழ்ந்து வந்தது. அது அங்க இங்க னு சந்தோஷமா ஆடி பாடி கொண்டு இருக்கும். ஒருநாள் அந்த பக்கம் காகம் ஒன்று வந்தது. அது சந்தோசமா சுற்றி திரிந்த மின்மினி பூச்சியை பார்த்தது. அதன் அருகில் மின்மினி பூச்சி வந்ததும் அதை சாப்பிட முயன்றது. காகத்திடமிருந்து மின்மினி பூச்சி தப்பித்து கொண்டது. காகமோ விடாமல் துரத்த முயன்றது. மின்மினி பூச்சி தனது பயத்தை வெளிக்காட்டாமல் ஒரு திட்டம் தீட்டியது. காகத்தை பார்த்து "அண்ணா, நா சொல்றத கொஞ்சம் கேளுங்க" என்றது. காகம் அதற்கு "என்னடா பொடியா சீக்கரம் சொல். எனக்கு பசிக்கிறது" என்றது. மின்மினி பூச்சி காகத்தின் அருகில் சென்று அதனிடம், யானை பசிக்கு சோள பொரியா" என்றது. காகத்திற்கு புரியவில்லை. அடேய், என்ன சொல்ல வர" என கேட்டது. மின்மினி அதற்கு, "அண்ணா, என்னை மட்டும் சாப்பிட்டால் உங்களுக்கு எப்படி பசி போகும். மறுபடியும் இரைக்கு அலைய வேண்டும். நான் ஒரு இடத்திற்கு கூட்டிக்கொண்டு போறேன். அங்கே என்னை மாதிரி நிறைய பூச்சிகள் இருக்கு. நீங்க வயிறார சாப்பிடலாம் என்றது. பேராசை காகமோ இதை கேட்டவுடன், டீல் நல்ல இருக்கு. உடனே போலாம் என்றது. மின்மினி பூச்சி தன்னை எதுவும் செய்ய கூடாது என காகத்திடம் ஒரு வாக்குறுதி வாங்கி கொண்டது. காகம் ஒப்பு கொள்ள இரண்டும் மின்மினி பூச்சி சொன்ன இடத்திற்கு விரைந்தன. சிறிது நேரத்தில் இடத்தை அடைந்தன. அங்கோ சில மனிதர்கள் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். காகம் மின்மினி பூச்சியிடம், "பொடியா எங்கே பூச்சிகள்" என கேட்டது. "அண்ணா, இங்குதா வரும் பொறு என்றது,மின்மினி. சிறிது நேரத்தில் மனிதர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். எரிந்து கொண்டிருந்த நெருப்பிலிருந்து சில நெருப்பு பொறிகள் வெளிய வந்து கொண்டிருந்தது. "அங்க பார்த்தயா அண்ணா, என்னை போலவே நிறைய பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன. போய் பசியாற சாப்பிடு" என்றது மின்மினி பூச்சி. மகிழ்ச்சியான காகம், "சபாஷ் டா பொடியா, நீ பிழைத்து கொள். நான் ஒரு கை பார்க்க போகிறேன்". என சொல்லியவாறு நெருப்பு பொறிகளை விழுங்க ஆரம்பித்தது. உடனே காகத்திற்கு வாய் எரிய ஆரம்பித்தது. "ஐயோ! இது என்ன பூச்சி. வாய் எல்லாம் எரியுதே. பூச்சியும் வேணா ஒன்னும் வேணாம்" னு. ஓட்டம் பிடித்தது காகம். அதை பார்த்த மின்மினி பூச்சி வயறு குலுங்க சிரித்தது. "நெருப்புடா நெருங்குடா" என பாடியவாறு தன கூட்டிற்கு பறந்து சென்றது.
குட்டிஸ், நீங்களும் உங்க நண்பர்களை உடல் ரீதியா பலவீனமா கருத கூடாது. உடல் வலிமையை விட மனவலிமை பெரியது. நீங்களும் மனவலிமையை வளர்த்து கொள்ளவேண்டும். மனோவலிமை மகத்தானது
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications