குழந்தை நீதி கதைகள்: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.. பெற்றோர் பேச்சை கேட்கனும் குட்டீஸ்!
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், துஷ்டனை கண்டால் தூர விலகு இது பழமொழி. நம்மை சுற்றி சில விரோதிகள் இருந்தால் நாம் அவர்களை விட்டு சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.
இப்ப ஸ்கூல்ல உங்ககிட்ட யாராவது பிரச்சனை பண்றாங்கன்னு வச்சிக்கலாம். நீங்க அப்ப என்ன பண்ணுவீங்க? நீங்களும் பதிலுக்கு சண்டை போடணும்னு இல்ல. உங்க மிஸ் கிட்ட சொல்லி அத சரி பண்ணிக்கலாம்.

இதை தெளிவா உங்களுக்கு புரியிற மாதிரி குட்டி ஸ்டோரி சொல்றேன். ஒரு காட்டுக்குள்ள சுட்டித்தனமான ஆட்டுக்குட்டி ஒன்று இருந்தது. அந்த ஆட்டுக்குட்டி எப்பவும் அவங்க அம்மா சொல்றத கேட்காது. அதுபாட்டுக்கு ஜாலியா சுற்றி வந்தது. அம்மா அங்க போகாத குட்டி அப்படின்னு சொன்னா சுட்டித்தனமா அங்கதான் போகும்.
ஒருநாள் ஆட்டுக்குட்டி இப்படி விளையாடி கொண்டே இருந்திச்சு , அப்போ திடீர்னு பக்கத்துல இருந்த சேற்றுக்குள்ள தவறி விழுந்திருச்சு. அது நல்லா இருக்கவும் அதுலயும் விளையாட ஆரம்பிச்சிடுச்சு. அவ்ளோதான் இத அவங்க அம்மா ஆடு பாக்க, ஆட்டுக்குட்டிக்கு பயம் வந்திடுச்சு. ஆனா அவங்க அம்மா ஆடு கோவப்படாம நிதானமா குட்டிய கூப்பிட ஆரம்பிச்சிது.
ஆட்டுக்குட்டி அம்மா அம்மா இது ரொம்ப சூப்பரா இருக்குமான்னு மறுபடியும் விளையாட ஆரம்பிச்சுது. அம்மா ஆடு, 'வாடா தங்கம் அம்மா உன்ன சுத்தம் செய்றேன்' னு கூப்பிட அதுவும் அம்மா சாரி மா னு சொல்லிட்டு வெளிய வந்துச்சு . அவங்க அம்மா ஆடும் பக்கத்துல இருக்க அருவிக்கு கூட்டிட்டு போக ஆரம்பிச்சது.
அவங்க ஜாலியா பேசிக்கிட்டே அருவியை பாத்து நடக்க ஆரம்பிச்சாங்க. அப்போ அவங்க அம்மா சொன்னாங்க, 'தனியா இந்த அருவிக்கு நீ எப்போவும் வரக்கூடாது தங்கம், நிறைய காட்டு மிருகங்கள் இந்த அருவிக்குதான் தண்ணி குடிக்க வரும். அதனால நீ தனியா வந்தா அவங்க பசிக்கு நீ இறையாகிடுவ' னு சொலிட்டே அருவிக்கும் வந்துட்டாங்க. அருவில குளிச்சு ஆட்டுக்குட்டிய சுத்தம் பண்ணிட்டு வீட்டுக்கும் போய்ட்டாங்க.
மறுபடியும் ஆட்டுக்குட்டி அதோட சுட்டித்தனமான விளையாட்டால் அந்த சேற்றுக்குள் விழுந்திருச்சு. இந்த முறை அம்மாக்கு தெரியாம நாமே சுத்தம் செய்யுதுக்கலாம்னு காட்டு அருவிக்கு குட்டிஆடு போக ஆரம்பிச்சது . அப்போ பாத்து ஓநாய் ஒன்னு அங்க தண்ணி குடிக்க வந்துருக்கு .
ஆட்டுகுட்டிய பாத்த ஓநாய் இன்னைக்கு சரியான வேட்டைனு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டே ஆட்டுக்குட்டி கிட்ட, 'நீதானா என்ன பத்தி ஒரு வருஷம் முன்னாடி காட்டுக்குள்ள புரளி பரப்பினது'னு கேக்க ஆரம்பிச்சது. ஆட்டுக்குட்டிக்கு புரிய ஆரம்பிச்சது நாம தனியா மாட்டிகிட்டோம். எப்படியாவது தப்பிக்கணும்னு யோசிக்க ஆரம்பிச்சது. அப்போ அங்கு சில வேட்டைக்கு போகும் மனிதர்கள் பேசுற சத்தம் கேக்க ஆரம்பிச்சது.
நிலையை புரிந்து கொண்ட ஆட்டுக்குட்டி ஓநாயிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தது. 'அது நான் இல்ல ஓநாய் அண்ணா நான் பொறந்து சில மாதங்களே ஆகுது என்னால எப்படி உங்கள பத்தி பேச முடியும்'. ஓநாயும் விடுவதாக இல்ல ,'நீ செய்த பிழைக்கு நீதான் என் உணவுனு முடிவு பண்ணிட்டேன்' னு சொல்லிச்சு. வேட்டைக்கு வந்தவர்கள் சத்தம் அருகில் கேட்கவே ஆட்டுக்குட்டி நான் இல்லனு சொல்ல ஆரம்பிச்சது.
இதை பார்த்த வேட்டையர்கள் ஓநாயை அடித்து விரட்டி அனுப்பிவிட்டார்கள். ஆட்டுக்குட்டியும் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றது.
ஆமாம் குட்டீஸ் பெற்றவர்கள் சொல் கேட்கணும். நீங்க பிரச்சனைல மாட்டிக்கிட்டா சமயோஜிதமாக யோசிச்சு அதுல இருந்து விடுபடனும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications