குழந்தை நீதி கதைகள்: கிராம மக்களால் சீண்டப்பட்ட ரோவர்.. புத்தியால் சாதித்தது என்ன?
சென்னை: Kids story in Tamil:
ஹாய் சுட்டிஸ், எப்படி இருக்கீங்க, விடுமுறைக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா. ஒரு செயலில் நமது புத்தியை எந்த அளவுக்கு சிந்திக்க வைக்க வேண்டும் என்பதை இந்த கதையில் வருபவனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கதை படிக்கலாமா.
அந்த கிராமத்தில் எல்லோரும் ஒருவனை பார்த்து ஏளனமாய் சிரித்து கொண்டிருந்தார்கள். அவன் பார்ப்பதற்கு சுருட்டை முடியுடன், மெலிந்தவன் போல் காணப்பட்டான். அவன் பெயர் ரோவர்.

எதற்காக சிரிக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த ஊரில் ஒரு செல்வந்தரான வியாபாரி இருந்தான். அவன் அவ்வளவு எளிதாக யாரையும் பார்க்க மாட்டான். யாராக இருந்தாலும் அவன் நினைத்தால் மட்டுமே அவர்களை பார்ப்பான். இந்நிலையில் தான் ரோவர் அந்த செல்வந்தன் வீட்டில் சென்று விருந்தே சாப்பிடுவேன் பந்தயம் ஆயிரம் பொற்காசுகள் என்றான். இதனால் தான் அந்த கூட்டமே சிரித்தது. சரி நாளை நான் விருந்து சாப்பிட செல்கிறேன் என்றான்.
சொன்னது போலவே செல்வந்திரின் வீட்டுக்கு சென்றான். அவன் வாயிற் காவலாளி அவனை இடை மறித்தான். அப்போது ரோவர் தங்கக்கட்டிகளை பற்றி பேச வேண்டும் உன் முதலாளி இடம் கேட்டு சொல் என்றான். செல்வந்தனோ அவனை உடனடியாக உள்ளே அனுப்ப சொன்னான். உணவருந்தும் நேரம் என்பதால் சாப்பிட்டு கொண்டே பேசலாம் என்றான் ரோவர். அவனும் சரி என்று கூறிவிட்டு தங்கத்தை பற்றி பேச தொடங்கினான். எப்போது தங்கக்கட்டிகளை கொண்டு வருவாய் என்றான் செல்வந்தன். நீங்க எப்போ சொல்றீங்களோ அப்பவே என்றான் ரோவர். சரி எவ்வளவு வைத்திருக்கிறாய் என்றான். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு என்றான் ரோவர். தங்கக்கட்டிகளை பற்றி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தார்கள்.
கை கழுவும்போது சரி எப்போது தங்கக்கட்டிகளை கொண்டு வருவாய் என்றான். என்னிடம் தங்கக்கட்டிகள் இல்லையே என்றான். பிறகு யாரிடம் இருக்கிறது என்றான் செல்வந்தன். எனக்கு தெரியாது என்றான் ரோவர். நீ தங்கக்கட்டிகளை பற்றி பேச வேண்டும் என்றதால் தான் உன்னை அனுமதித்தேன். ஆமாம் அதை பற்றி தான் பேசினேன். என்னிடம் இருக்கிறது, தரட்டுமா என்று சொல்லவில்லையே என்றான் ரோவர். கோபம் கொப்பளித்த செல்வந்தர் அவன் காவலாளியை அழைத்து இவனை இழுத்து செல்ல சொன்னான். நானே போய் கொள்வேன் சட்டையெல்லாம் பிடிக்க வேண்டாம் என தட்டி விட்டு சென்றான்.
வெளியில் வந்ததும் அந்த கூட்டத்தில் இருந்தவர்களிடம் ஆயிரம் பொற்காசுகளை வாங்கி கொண்டான். மற்றொரு நாள் அவன் கிராமத்தின் வழிப்பாதையில் நடந்து கொண்டிருந்தான். அப்போது பக்கத்து கிராமத்து மக்கள் வழியில் கிடந்த பெரிய பாறையை நகர்த்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ரோவர் அந்த கூட்டத்தை விலக்கி எட்டி பார்த்தான். சரி இதை தூக்கி அந்த பக்கம் வீசினால் எவ்வளவு பொற்காசுகள் தருவீர்கள் என்றான். ஆயிரம் என்றதும் குஷியான ரோவர், முதலில் பொற்காசுகளை கொடுங்கள் தூக்கி வீசுகிறேன் என்றான்.
பலரும் சிரித்தார்கள், ஏனெனில் ரோவர் பார்ப்பதற்கே மெலிந்து இருந்ததுதான். உடல் வலிமை கொண்ட பலராலும் அதை நகர்த்த கூட முடியவில்லை இவன் வீசுவானாமே என்றார்கள். ஆனாலும் ஒருவர் மட்டும் முன் வந்து சரி நான் தருகிறேன் ஆனால் இப்போது பாதி மீதி நீ பாறையை வீசியதும் என்றான். ரோவர் 500 பொற்காசுகளை வாங்கி கொண்டு கையை உயர்த்தி நின்றான். எல்லோரும் வித்தியாசமாக அவனை பார்க்க, பாறையை தூக்கி என் கையில் வையுங்கள் என்றான். அதிர்ச்சியான மக்கள் அவனை அடித்து வெளியே அனுப்பினார்கள். இருந்தாலும் அவனுக்கு 500 பொற்காசுகள் கிடைத்ததால் கிளம்பினான்.
வெளியில் வந்ததும் அந்த கூட்டத்தில் இருந்தவர்களிடம் ஆயிரம் பொற்காசுகளை வாங்கி கொண்டான். மற்றொரு நாள் அவன் கிராமத்தின் வழிப்பாதையில் நடந்து கொண்டிருந்தான். அப்போது பக்கத்து கிராமத்து மக்கள் வழியில் கிடந்த பெரிய பாறையை நகர்த்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ரோவர் அந்த கூட்டத்தை விலக்கி எட்டி பார்த்தான். சரி இதை உங்களுக்காக நான் செய்கிறேன் ஆனால் அதற்காக எவ்வளவு பொற்காசுகள் தருவீர்கள் என்றான். ஆயிரம் என்றதும் குஷியான ரோவர், முதலில் பொற்காசுகளை கொடுங்கள் செய்கிறேன் என்றான்.
பலரும் சிரித்தார்கள், ஏனெனில் ரோவர் பார்ப்பதற்கே மெலிந்து இருந்ததுதான். உடல் வலிமை கொண்ட பலராலும் அதை நகர்த்த கூட முடியவில்லை இவன் எப்படி செய்வான் என்றார்கள். ஆனாலும் ஒருவர் மட்டும் முன் வந்து சரி நான் தருகிறேன் ஆனால் இப்போது பாதி மீதி நீ பாறையை வீசியதும் என்றான். ரோவர் 500 பொற்காசுகளை வாங்கி கொண்டு கையை உயர்த்தி நின்றான். எல்லோரும் வித்தியாசமாக அவனை பார்க்க, பாறையை தூக்கி என் கையில் வையுங்கள் என்றான். அதிர்ச்சியான மக்கள் அவனிடம் ஏமாந்ததை உணர்ந்தார்கள். இருந்தாலும் அவனுக்கு 500 பொற்காசுகள் கிடைத்ததால் மகிழ்ச்சியாக கிளம்பினான்.

அதற்கு பக்கத்து கிராமத்தில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு போட்டி, அதில் தூரத்தில் இருக்கும் மதில் அருகில் ஒரு துணியை வீசினால் பரிசு கிடைக்கும். மதிலை தாண்டி சென்றாலும் சரி, மதிலின் முன்பக்கம் அதை தொட்டு விழுந்தாலும் சரி 1 லட்சம் பொற்காசுகள் என்று பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
பலரும் ஆர்வமாய் கலந்து கொண்டார்கள். ஆனால் வீசிய இடத்தில இருந்து எதிர்திசையில் அந்த துணி பறந்தது. காரணம் காற்றின் விசை எதிர்புறமாக இருந்தது. அனைவரையும் பார்த்து யோசித்து கொண்டிருந்த ரோவர், போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தான். துணியின் ஒரு முனையில் கல்லை கட்டி வேகமாக வீசினான். மதிலை தொட்டு துணி கீழே விழுந்தது. அவன் சிந்தித்து செயல்பட்டதால் அந்த பரிசை வென்றான்.
ஆகையால் குழந்தைகளே சிந்தனைகளை தெளிவாக வைத்து உங்கள் செயலில் அதை செயல்படுத்துங்கள். சில தோல்விகள் கிடைத்தாலும், வெற்றியை தேடி போக அதுவே வழிவகுக்கும்












Click it and Unblock the Notifications