கவர்ச்சிக்கு நோ.. சினிமாவை விட்டு விலகிய நடிகை சுவலட்சுமி.. இப்போ எப்படி இருக்கிறார்? லீக்கான போட்டோஸ்
சென்னை: 90-ஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகை சுவலட்சுமியை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. பெரிய அளவில் கவர்ச்சி, சர்ச்சை என எதுவுமே இல்லாமல் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் சுவலட்சுமியும் ஒருவர். ஆனால் ஒரு கட்டத்தில் சினிமா, சீரியல் என எல்லாவற்றையும் விட்டு விலகி சுவலட்சுமி இப்போது எங்கே இருக்கிறார் என்ற கேள்வி இன்றும் ரசிகர்களிடம் இருக்கிறது.
சுவலட்சுமியின் திரைபயணம் தமிழ் சினிமாவில் தொடங்கவில்லை. 1994 ஆம் ஆண்டு வெளியான வங்க மொழி படமான உத்தோரன் படத்தில் தான் அவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு 1995 ஆம் ஆண்டு அஜித் நடித்த ஆசை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். முதல் படத்திலேயே யமுனா கேரக்டர் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. கோலிகுண்டு கண்ணு, வட்ட முகம், எளிமையான சிரிப்பு என இவருடைய அழகு ரசிகர்களுக்கு பிடித்து விட்டது.

நடிகை சுவலட்சுமி நடித்த படங்கள்
முதல் படத்திலிருந்து தமிழ் ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டிக்கொண்ட இவர் அதற்கு பிறகு கோகுலத்தில் சீதை, லவ் டுடே, நிலவே வா, இனியவளே, தினம் தோறும், ஏழையின் சிரிப்பில், மாயி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருந்தார். அதிலும் குறிப்பாக விஜய்யுடன் லவ் டுடே, நிலவே வா படங்களில் நடித்ததால் 90ஸ் ரசிகர்களுக்கு பேவரைட் நடிகையாகவும் மாறிவிட்டார்.
அதுபோல சுவலட்சுமியை பற்றி அப்போது அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று அவருடைய ஹோம்லி இமேஜ். கதைக்கு தேவை இல்லாமல் கவர்ச்சியாக நடிப்பதில் அவர் ஆர்வமே காட்டவில்லை. 90ஸ் கால இறுதியில் கதாநாயகிகளுக்கு கிளாமர் முக்கியமாக மாறிய சூழலில் தனக்கு அதுவெல்லாம் செட்டே ஆகாது என்னுடைய கேரக்டருக்கு தகுந்த கதாபாத்திரம் வந்தால் மட்டும் நான் அதில் நடிப்பேன் என்று அவரே ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
ஹோம்லி கேரக்டர்
தொடர்ந்து ஹோம்லி கேரக்டர் என்ற ஒரு வட்டத்திற்குள்ளே அவர் இருந்ததும் அவருடைய வாய்ப்பு குறைந்ததற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு முதல் 2002 ஆண்டு வரை ஒளிபரப்பான சூலம் சீரியலில் பார்வதியாக நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் இந்த சீரியலை பார்த்த ரசிகர்களுக்கு சுவலட்சுமி முகம் இன்றும் மறக்க முடியாத ஒன்று. அதிலும் அந்த சீரியல் பாடலுக்கு சுவலட்சுமியின் டான்ஸ் ரொம்பவும் க்யூட்டாக இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு சுவலட்சுமி படிப்படியாக நடிப்பில் இருந்து விலகினார்.
ஆடிஷன் போன பிரபல சீரியல் நடிகை.. நி***மாக போட்டோ எடுத்த தயாரிப்பாளர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
2003 ஆம் ஆண்டு வெளியான நதிக்கரையினிலே என்ற படத்தில் அவர் நடித்திருந்ததும் பாராட்டு வாங்கியது. அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு பரிசையும் வங்கி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவரை அதிகமாக பார்க்க முடியவில்லை. இதில் இன்னும் பலருக்கு தெரியாத இன்னொரு விஷயமும் இருக்கிறது.

சுவலட்சுமி திருமணம்
சுவலட்சுமியின் திருமணத்திற்கு பிறகு, இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் வந்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சுவலட்சுமியை நடிக்க வைப்பதற்காக மோகன் ராஜா முயற்சி செய்தாராம். ஆனால் அவர் மீண்டும் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார். அதுமட்டுமில்லாமல் சுவலட்சுமி ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்த பிறகு ஜெனிவா, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்திருக்கிறார்.

சுவலட்சுமி தற்போதைய நிலை
நடிப்பை விட்டு விலகிய பிறகு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அகாடமி ஆப் ஆர்ட்ஸ் யூனிவர்சிட்டியில் Academy Of Arts University) மாஸ்டர் ஆஃப் ஃபைவ் ஆர்ட்ஸ் (Master Of Fine Arts) பட்டம் பெற்றிருக்கிறாராம். தற்போது அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் கலை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
காதல் கணவரை விவாகரத்து செய்ய போகிறாரா சீரியல் நடிகை ரேஷ்மா? ரசிகர்கள் கவனித்த ஒரு விஷயம்! அடுத்த பஞ்சாயத்து
அதோடு அவருடைய கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சுவலட்சுமி இப்போ இப்படித்தான் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இது இப்போது எடுத்த புகைப்படமா? அல்லது சில வருடங்களுக்கு முன்பே எடுத்த புகைப்படங்களா? என்றும் உறுதியாக தெரியவில்லை. சுபலட்சுமி எந்த சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக இல்லாததால் அவருடைய ரசிகர்கள் அவரை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறார்கள். உங்களுக்கு சுவலட்சுமியை பிடிக்குமா? அவருடைய எந்த படம் உங்களுக்கு பிடிக்கும்.












Click it and Unblock the Notifications