குழந்தை நீதி கதைகள்: வழிப்போக்கனுக்கு உணவு கொடுக்க.. அவரிடமா சிக்கினார்?
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க..பள்ளி பருவம் மிகப்பெரிய பொக்கிஷம். அதை மகிழ்ச்சியுடன் வாழுங்கள். ஒருவரின் வாழ்க்கை இந்த உலகில் எப்படி இருக்கும் என்பதை இந்த கதையில் படிக்கலாம் வாங்க..
மனோஜ் அந்த ஊரில் தங்கும் விடுதி ஒன்றை வழி நடத்தி வந்தார். வெகு தூரங்களில் இருந்து பயணம் செய்து வருபவர்கள் அங்கு ஒய்வு எடுப்பார்கள். சிறிது நேரம் இளைப்பாறி செல்ல அவன் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. மேலும் வருபவர்கள் சாப்பிட அளவில்லாமல் உணவுகளை சமைத்தும் வைப்பான். அவர்கள் அதற்கு விருப்பம் போல் கட்டணமாக பணத்தை கொடுக்கலாம் என்றும் இருந்தது.

மானோஜிற்கு, பெரிய ஆடம்பர வாழ்க்கை இல்லை என்றாலும், ஓரளவுக்கு ஒரு தொழில் செய்யும் அளவுக்கு பூர்விகம் இருந்தது. அவனுக்கு மனைவி, குழந்தைகள், சகோதர சகோதரிகள் என பலர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தார்கள். தங்கி ஒய்வு எடுப்பவர்களுக்காக வீட்டில் நிறைய திண்ணைகள் அமைத்தும் இருந்தான்.
இதை சேவையாக செய்தும் வந்தான். ஒருநாள் வெளியூர் பயணம் மேற்கொண்டு திரும்பி வரும்போது அவன் வீட்டின் வாசலில் உயரமான மனிதர் ஒருவர் தனது குதிரையுடன் நின்றிந்தார். அவரை பார்த்த மனோஜ், ஐயா உள்ளே வந்து இளைப்பாருங்கள் என்றான். அதற்கு அவரோ என்னால் ஒய்வு எடுக்கும் அளவுக்கு உள்ளே நுழைய முடியாது நான் இப்படி ஓரமாக இருந்துவிட்டு செல்கிறேன் என்றான். அவரின் யாரும் காரணமாக, மனோஜ் மேலும் அவரை வற்புறுத்தவில்லை. உணவு மட்டும் சாப்பிடலாமே என்று கேட்க அவர் அதற்கும் உள்ளே கூட்டமாக இருக்கிறது வேண்டாம் என மறுத்தார்.
அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனம் வேதனை பட்ட அவன், சட்டென உள்ளே சென்று அவருக்காக உணவை தயார் செய்து அவர் இருக்கும் இடத்திற்கு எடுத்து வந்தான். அவனது கனிவான குணத்தை பார்த்த அவர், அவன் முகத்தில் ஏதோ கவலை தெரிவதை கவனித்தார்.

வயிறு முட்ட சாப்பிட அவரோ, உணவிற்கு நன்றி மனோஜ் ஆனால் உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிகிறதே என்று கேட்க அது ஒன்றுமில்லை என மறுத்துவிட்டான். உணவளித்த உனது கவலையை சரி செய்ய முடியவில்லை என்றாலும் என்னால் முடிந்த தீர்வை சொல்லுவேன் என்று சொல்ல, எதுவும் இல்லை என்பது போல தலையசைத்தான்.
ஒரு நொடியில் குதிரை எரும மாடாக மாற, அந்த உயரமான மனிதர் எம தர்மராக மாறினார். உடல் எல்லாம் நடுங்கி, வெலவெலத்து போன மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக, இப்போது சொல் என எமன் கேட்டார். அது நீங்கள் என்னை அழைத்து வந்திருக்கீர்களா என்று கேட்க, இல்லை நான் பூமியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வந்தேன். உன் கனிவான செயலால் உணவளித்து என்னை கவர்ந்துவிட்டாய் என்றார்.
சரி, இப்போது சொல் என்ன கவலை என்று கேட்டார் எமன். அது எனக்கு பிறகு இதை யார் எடுத்து செய்வார்கள், இதை ஒரு சேவையாக செய்கிறேன் அதே மனப்பான்மையில் எனக்கு பின்னல் வருபவர்கள் செய்வார்களா? தீடிரென எனக்கு ஏதும் ஆகிவிட்டால் என யோசித்ததில் கவலையாக உள்ளேன் என்றான் மனோஜ்.
சரி ஒன்று செய்யலாம். உன்னை அழைத்து செல்வதற்கு முன்னால், உனக்கு பல வகைகளில் நான் அறிகுறி தருகிறேன். அதற்குள் நீ அனைத்தையும் சரி செய்துகொள் இது எனது வாக்கு என்று சொல்லி எமன் அங்கிருந்து மறைந்தார். சற்றும் எதிர்பார்க்காத மனோஜ், அவனுக்கு பின்னால் இருப்பவர்களை சரியாக வழிநடத்தினான்.
காலங்கள் ஓடியது, மனோஜ் வயதும் ஆகி கிழவனாக மாறி தள்ளாடி நடக்க ஆரம்பித்தான். எமனும் எந்த அறிகுறியும் தரவில்லை என மகிழ்ச்சியாகவே வாழ்க்கையை நடத்தினான். இப்போது அவனது விடுதி இன்னும் பெருசாக மாறி இருந்தது. இன்னும் பலர் வந்து தங்கி சென்றார்கள். மனோஜ் மாட்டும் இல்லாமல் அவனது சகோதரர்களின் குழந்தைகள் மற்றும் இவனது குழந்தைகள் அதை சிறப்பாக வழிநடத்தினார்கள்.
அமைதியாக தூங்க சென்ற மனோஜ் கனவில், எமன் வந்து இப்பொது போலாமா என்று கேட்க, இது என்ன பொய்யாட்டம் ஆடுகிறீர்கள், இதுவரை எந்த அறிகுறியும் தராமல் வா என்றால் எப்படி என்று கோப பட்டன் மனோஜ். எமனோ, உனக்கு நிறைய அறிகுறிகள் கொடுத்தானே! என்றார்.
அது எப்படி எனக்கு எந்த வித விபத்துகளும் நேரவில்லை, நான் நல்ல சுகத்துடன் இருக்கிறேன் என்றான் மனோஜ். உடனே எமன், இல்லை இல்லை உன் முதுகு வளைந்து விட்டது, உன் முடி வெள்ளையாகிவிட்டது. உன் பற்கள் விழுந்துவிட்டது இது எல்லாமே அறிகுறிதான் என்றான். இதுவா, இது எல்லோருக்கும் நடப்பது தானே, வயதானால் அனைவர்க்கும் இதுதானே நடக்கும் என்றான். ஆமாம் அதுதான் அறிகுறி, அதற்குள் உங்கள் கடமைகளை முடித்துவிட வேண்டும் என்பதற்காக தான் ஒரு ஒரு மாற்றத்தை கொடுப்பேன் என்றார்.
அப்படி என்றால், நமக்கு எதுவும் ஸ்பெஷல் ஆக எமன் உதவவில்லை என்ற உண்மையை புரிந்துகொண்ட மனோஜ், கால சுழற்சியை ஏற்று கொண்டு எமனுடன் சந்தோசமாக சென்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications