குழந்தை நீதி கதைகள்: நீயா, நானா.. யாரு பெரியவன் அடிச்சு பார்ப்போமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: குழந்தை நீதி கதைகள்: நீயா, நானா.. யாரு பெரியவன் அடிச்சு பாப்போமா?

ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. உங்கள் நண்பர்கள் கூட எப்போவாச்சும் யாரு பெரியவங்கனு சண்டை போட்டு இருக்கீங்களா, அப்படி போட்டு யாரு பெரியவங்கனு நிரூபிச்சி இருக்கீங்களா. இங்க ரெண்டு பேரு சண்டை போட்டு யாரு பெருசுன்னு நிரூபிச்சிருக்காங்க பாருங்க.

நல்ல காற்று வானில் வீச, அதன் பின்னாடியே சுட்டெரிக்கும் சூரியனும் வந்தது. இரண்டு பேரும் என்ன இந்த பக்கம் என பேசிக்கொள்ள, மக்களுக்கு அழகான காற்று கொடுக்கலாம்னு வந்தேன் நீதான் சுட்டெரிக்கிறீயே என்றது காற்று. என்னதான் நீ வீசினாலும் மக்கள் என்னை தான் தேடுவாங்க. நான் இல்லாமல் அவங்களால் இருக்க முடியாது என்றது சூரியன்.

Short story for kids in Tamil who won

கண்கள் சிவக்க சூரியன் பேசியதும், சத்தம்போட்டு சிரித்தது, காற்று. இப்போ என்ன நீதான் பெரியவன் அப்படி நான் ஒத்துக்கொள்ள வேண்டுமா? என்றது. சூரியன் கண்கள் கொப்பளிக்க, ஆமாம் அதில் என்ன சந்தேகம் நான் தான் பெரியவன் என்றது.

மீண்டும் சிரித்த காற்று, அப்போ போட்டி வைத்து கொள்வோம். யார் பெரியவர் என்று பார்த்து விடுவோம் என்று சொல்ல என்ன போட்டி என்று கேட்டது சூரியன். இருவரும் வானில் இருந்து பூமியை பார்த்தார்கள். அங்கு கீழே ஒரு சிறுவன் நடந்து கொண்டிருக்க, அவன் கோட் ஒன்றை போட்டிருந்தான். இப்போ போட்டியை அறிவித்த சூரியன் அவன் போட்டிருக்கும் கோட்டை கழட்ட வைக்க வேண்டும் என்றது.

ச்ச... இதெல்லாம் ஒரு போட்டியா என்று சிரித்த காற்று, நான் முதலில் கழட்ட வைக்கிறேன் என்றது. காற்றை வேகமாக அவன் பக்கம் வீச தொடங்கியது. சிறுவன் தனது கோட்டை இறுக்கமாக பிடித்து கொண்டான். அட என்ன இவன் டைட்டா பிடிச்சிக்கிட்டானே என எண்ணிய காற்று இன்னும் வேகமாக வீசியது. சிறுவன் தனது கோட் பட்டன்களை போட்டான். சூரியன் சிரித்தது. இரு இரு இப்போ கோட் காற்றில் தூக்கி வாறி போகும் என்றது.

இன்னும் வேகமாக காற்று வீச, அவன் தலையில் கோட் பின்னல் தொங்கி கொண்டிருந்த தொப்பி விழுந்தது. அட இது என்னடா, இன்னைக்கு என்று இவ்ளோ காற்று வீசுதே என்றான் சிறுவன். தொப்பி கயிறை இழுத்து கழுத்தில் கட்டினான். காற்றுக்கு கோபம் ஏற இன்னும் வேகமாக வீசியது. சிறுவன் குளிரில் நடுங்கினான். காற்றை திட்ட ஆரம்பித்தான். என்னடா இது, நம்மை இப்படி கஷ்டப்படுத்தவா இந்த காற்று வீசுகிறது என்று கடுமையாக திட்டினான்.

இதை கேட்ட சூரியன் காற்றே ஓரம் தள்ளு உன் டைம் முடிஞ்சிடுச்சு இப்போ என்ன பாரு என்று சொல்லி, மெதுவாக மேகத்தில் இருந்து எட்டி பார்த்தது. சிறுவன் ஒரு அழகான வார்ம் கிடைத்ததை உணர்ந்தான். அப்பாடா, சூரியன் வருது நல்லவேளை இந்த மோசமான காற்றிடம் இருந்து காப்பாற்றினாய் என்றான்.

சிறுவன் சொன்னதும் சூரியன் சிரித்தது, காற்று என்னடா நம்ம நல்லதுதானே பண்ணோம் இவன் என்ன என்னை திட்டுகிறான். சூரியன் இன்னும் கதிர்களை வெளிக்காட்டியது. சிறுவன் ஆகா சூடு வருதே, கோட் பட்டன்களை கழட்டலாம் என கழட்டி லூஸ் விட்டான். சூரியன் விடவில்லை, மீண்டும் கதிர்களை அனுப்பியது. இவ்ளோ வெயிலா, என கோட்டை கழட்டினான் சிறுவன். அவ்வளவுதான் சொன்னது போல சூரியன் கோட்டை கழட்ட வைத்தது.

மெதுவாக மேகம் பின்னே சூரியன் சென்றது. இதமான காற்றுடன் சூரிய வெப்பத்தில் சிறுவன் நடந்து வீட்டை அடைந்தான். சிறுவன் சூரியனுக்கு நல்லவேளை காப்பாற்றினாய் என நன்றியும் கூறினான்.

இப்போ சொல்லுங்க யாரு வின் பண்ணது. நமக்கு இருக்கும் பலத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தவில்லை என்றால் நாம் தோற்க நேரிடும். புரிந்து செயல்படுங்கள் குட்டிஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+