'பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்'.. 2000 நோட்டு வாபஸ் குறித்து விதவிதமான மீம்ஸ்கள்
சென்னை: 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் குறித்து பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அப்படி பரவி வரும் மீம்ஸ்களின் தொகுப்புகளை இப்போது பார்ப்போம்.
ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வ அவை செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் மற்றும்/அல்லது பிற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் " என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போதைய நிலையில் செல்லும் எனவே பயப்படத்தேவையில்லை. எனினும் வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து 500 ரூபாய் அல்லது வேறு நோட்டுக்களை வாங்கி கொள்ளலாம்

அதேநேரம் ரொக்க எக்ஸேன்ஞ் என்பது இப்போதைய நிலையில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நடைமுறைக்கு வருகிறது. ஒரு நாளைக்கு ஒருவரால் 20 ஆயிரம் ரூபாய் வரை தான் ரொக்கமாக எக்ஸேன்ஞ்ச் செய்ய முடியும். அதற்கு மேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது. 2000 ரூபாய் நோட்டுக்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2000 நோட்டு திரும்ப பெறப்படுவது ஏன்: "சுமார் 89% ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டது. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ஆக இருந்தது. ஆனால் 2000 நோட்டுகள் ₹6.73 லட்சம் கோடியிலிருந்து ₹3.62 லட்சம் கோடியாக தற்போது (மார்ச் 31 2023) குறைந்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே 2000 நோட்டுகள். இந்த மதிப்பை பொதுவாக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" படி, ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பிற்கு பின்னர் பல்வேறு வகையான மீம்ஸ்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. 2000 ரூபாய் நோட்டை கண்ணிலேயே பார்க்கவில்லை. அதற்குள் அது செல்லாமல் போய்விட்டதா என்று ஒரு மீம்ஸ் பரவி வருகிறது. இதேபோல் கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி 2000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்திருப்பதாக ஒரு மீம்ஸ் பரவி வருகிறது. இதேபோல் பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே என்று ஒரு மீம்சும் பரவி வருகிறது. பல்வேறு வகையான மீம்ஸ்களை இப்போது பார்ப்போம்,.









-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications