தலைவரே 4வது எட்டே முடியப் போகுது.. இன்னும் எனக்கு பொண்ணு கிடைச்சபாடில்ல!
சென்னை : காதலர் தினம், தை மாத முகூர்த்தங்கள் என ஊரே காதல் மற்றும் திருமணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல் 90ஸ் கிட்ஸ்கள் தங்கள் நிலைமையை நினைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
பாட்ஷா படத்தில் ஒவ்வொரு எட்டிலும் மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என ரஜினி பாட்டு பாடி வைத்தாலும் வைத்தார், நம் 90ஸ் கிட்ஸ்கள் அதை வைத்துத்தான் தங்களது வாழ்க்கையை நினைத்து நொந்து நூடுல்ஸ் ஆகி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் 3ம் எட்டில் செய்யாதது திருமணமல்ல.. என அந்தப் பாட்டில் வரும் வரியை வைத்து, "தலைவரே 4வது எட்டே முடியப் போகுது.. இன்னும் எனக்கு பொண்ணு கிடைச்சபாடில்ல!" என மீம்ஸ்களில் புலம்பியுள்ளனர்.
சரி, திருமணம்தான் நடக்கவில்லை என்றால், இந்தக் கடவுள் பிரச்சினைக்கு மேல் பிரச்சினையாக தருகிறாரே என்றும் தங்கள் மீம்ஸ்களில் அவர்கள் ஃபீல் செய்துள்ளனர். "ஓ.. அழுக சத்தமா அது.. நாங்கூட சிரிக்கிற சத்தம்னுல நினைச்சேன்!" என கடவுளே தங்களைக் கலாய்ப்பதாக அவர்கள் பகிர்ந்துள்ள மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications