இதுக்குத்தான் தம்பிகளுக்கு ஒரு அக்கா வேணும்னு சொல்றது.. இந்த வீடியோவை நீங்களே பாருங்க
பெய்ஜிங் : குழந்தைகள் பொதுவாக மருந்து குடிக்க அடம்பிடிக்கும் அம்மாக்கள், மருந்தை அக்காவிற்கோ, அண்ணனுக்கோ கொடுப்பேன் என்று மிரட்டி கொடுப்பார். இங்கு அக்கா அதிரடியாக கொடுத்து அம்மாவையே திகைக்க வைத்திருக்கிறார். இந்த மீம்ஸ் வீடியோவை பாருங்கள்.
சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ் வீடியோவை பார்த்திருப்பீர்கள்.. சில வீடியோக்கள் உங்களை சிரிக்க தூண்டும். சில மீம்ஸ் வீடியோக்கள் உங்களை சிந்திக்க வைக்கும். சில மீம்ஸ் வீடியோக்கள் உங்களை கோபப்படுத்தலாம். சில உங்களை திகைப்பிலும் ஆழ்த்தலாம். சில மீம்ஸ் வீடியோ பார்த்து நீங்கள் கடுப்பாகி கூட இருப்பீர்கள்.
இப்போது நாம் பார்க்க போகும் வீடியோ உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். ஆம். ஒரு குழந்தை மருந்து குடிக்க நீண்ட நேரம் அடம்பிடித்து அழுது கொண்டிருந்தது. அதை அமைதியாக கண்டும் காணாதது போல் குழந்தையின் அக்கா உட்கார்ந்திருந்தாள். மறுபக்கம் அம்மாவோ குழந்தையை சமாதானம் செய்து கொடுக்க முயற்சிக்கிறார்.
அப்போது எழுந்து வரும் குழந்தையின் அக்கா, சற்றும் யோசிக்காமல், அம்மாவிடம் இருந்து மருந்தை வாங்குகிறாள் (மருந்தா என்னவென்று உறுதியாக தெரியவில்லை). உடனே குழந்தையின் தலையை தூக்கிபிடித்து சில நொடியில் குழந்தையின் வாயில் ஊற்றுகிறாள். குழந்தை அதனை குடித்துவிட்டு அப்படியே அழுகமால் நிற்கிறான்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் சீனாவில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை பார்தத நம்ம ஊர் நெட்டிசன்கள், இதுக்குத்தான் தம்பிகளுக்கு ஒரு அக்கா வேணும்னு சொல்றது என்று கூறி வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
அதேநேரம் குழந்தைகளுக்கு இப்படி மருந்துகளை கொடுக்க பக்குவம் இல்லாத சிறுகுழந்தைகள் முயற்சிப்பதை பெற்றோர் ஏற்கக்கூடாது. பெற்றோர் இதுபோன்ற செயல்கள் செய்வதை ஏற்கக்கூடாது என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

இன்னொரு மீம்ஸ் படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் குழந்தை பள்ளிக்கு போவதை பற்றி இருக்கிறது.இந்த காலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பெரும்பாடாக உள்ளது. அதுவும் எல்கேஜிக்கு குழந்தைகளை அனுப்புவது மிகவும் கடினமாக இருக்கிறது. குழந்தை பள்ளிக்கு போக மிகவும் அடம்பிடிப்பான். அவனை சமாதானம் செய்வது எளிதல்ல. இந்நிலையில் பூனை ஒன்று குழந்தையிடம் பேசுவது போல மீம்ஸ் இருக்கிறது. அதில் கால் இருக்கிறது என்று நடந்துடாதடா. உன்னை ஸ்கூலுக்கு அனுப்பிருவாங்க என்று மீம்ஸ் இருக்கிறது.
இதுக்கு தான் தம்பிக்கு ஒரு அக்கா வேணும்னு சொல்றது 😂😂 pic.twitter.com/vNoRKuKSHs
— சிதறல்கள் (@mujib989898) June 16, 2023
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications