''மொத்த கொரோனாவும் 4,500 பஸ்கள் மூலம் ஊருக்கு போயிட்டு இருக்கு''.. போட்டு தாக்கிய மீம்ஸ்கள்!
சென்னை: தமிழகத்தில் இன்று கடைகளில் திரண்ட கூட்டமும், பஸ்களில் அலைமோதிய பயணிகளின் கூட்டமும் மீம்ஸ்களாக வைரலாகின.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு நாளை முதல் ஒரு வாரம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட மிக அத்திவாசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள் இயங்கவும்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரண்ட மக்கள்
நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் நேற்று மதியம் முதல் இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. சொல்லி வைத்தாற்போல் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் திருவிழாவை போல் அலைமோதியது. ஒரு வார முழு ஊரடங்கில் கட்டுப்படுத்தப்படும் கொரோனாவை ஒரே நாளில் கொண்டு வருவதுபோல் மக்கள் அலை, அலையாக திரண்டனர்.

பேருந்துகள் இயக்கம்
அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடைகள் முதல் ஆடம்பர பொருட்கள் விற்கும் கடை வரை மக்கள் கொரோனாவை மறந்து கூட்டினார்கள். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதே போல் முழு ஊரடங்கு வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழகத்தில் நேற்றும், இன்றும் 4500 பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,500 பேருந்துகளும், மற்ற மாவட்டங்களில் 3,000 பேருந்துகளும் இயக்கப்பட்டன. இது தவிர ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன.

படையெடுத்தனர்
சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம், கூட்டமாக சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் பயணித்தனர். இதன் மூலம் கொரோனா நகரத்தில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா எளிதில் சென்று விடும் என்று பலரும் எச்சரித்தனர். இந்த நிலையில் மக்கள் கடைகளுக்கு படையெடுத்தது குறித்தும், பேருந்துகளில் கூட்டமாக சென்றது குறித்தும் மீம்ஸ்கள் வைரலாகின.

தெறிக்க விட்ட மீம்ஸ்கள்
''திடீரென திறந்த கடைகள், திடீரென வந்த பஸ்கள், திடீரென குவிந்த மக்கள், ஆனந்தத்தில் திக்குமுக்காடி போன கொரோனா'' என்று ஒருவர் மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா நிலவரம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது ரமேஷ்? 4500 பஸ்கள் மூலம் எல்லா இடங்களுக்கும் போய் கொண்டிருக்கிறது கோபி'' என்று ஒரு நெட்டிசன் கலக்கி உள்ளார்.

கலக்கிய நெட்டிசன்கள்
இன்று அதிக வேலை இருந்தது என்பதை குறிக்கும் வகையில் '' இன்னிக்கு புல்லா எல்லா வேலையும் சொல்லி சாகடிக்கிறாங்களே'' என்று வாலிபர்கள் பலர் மீம்ஸ்கள் மூலம் பொங்கி எழுந்தனர். இன்று முழுவதும் சோஷியல் மீடியாக்கள் முழுவதும் மீம்ஸ்களால் நிரம்பி வழிந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications