அப்பாடா.. பாட்டு இந்தியா ஃபுல்லா ரிச் ஆகப்போகுது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பாடல் பாடிய நடிகர் சிம்புவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவரது இந்தப் பாடலுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூகவலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

மெர்சல் படம் பாஜகவினர் விமர்சித்ததால் பெரும் ஹிட்டானதாக கூறப்பட்டது. அதேபோல் சிம்புவும் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிடுவார் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நல்ல விளம்பரம் பண்றாங்க

சிம்புவும் பிரபலம் ஆயிடுவாரு டிமானிடிசேஷன் சாங்க்கு நல்ல விளம்பரம் பண்றாங்க... என்கிறது இந்த டிவிட்

இந்த பாட்ட படிச்சதுக்காகவே

சிம்பு தில்ல பாராட்டலாம்.. இந்த பாட்ட படிச்சதுக்காகவே... என்கிறார் இந்த நெட்டிசன்

அவங்களுக்கும் புரியனும் இல்ல

அப்பாடா.. பாட்டு இந்தியா ஃபுல்லா ரிச் ஆகப்போகுது.. சிம்பு நீங்க இங்கிலிஷ்ல பாடியிருந்தா நல்லா இருக்கும்... ஏன்னா வட இந்தியர்களுக்கு புரியனும் இல்ல...என்கிறார் இந்த வலைஞர்..

சிம்புவின் அதிரடி பாட்டு

பாஜகவினரை திகிலடிக்க வைத்த சிம்புவின் அதிரடி பாட்டு.. என டிவிட்டியுள்ளார் இந்த நெட்டிசன்..

ஆசைப்பட்டாய் சிம்புகுமாரா

பணமதிப்பிழப்புக்கு எதிராக பாட்டு பாடிய சிம்பு வீட்டிற்கு போலீஸ் காவல் - செய்தி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிம்புகுமாரா... என கேட்கிறார் இந்த வலைஞர்..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Simbu song about demonetisation impact in a movie. BJP opposing the controversy song.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற