நீங்க மாத்தனும்னு சொன்னது இது தானா?.... ரஜினி பேனர்களுக்கு நெட்டிசன்கள் கேள்வி
சென்னை மதுரவாயல் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் நடிகர் ரஜினிகாந்திற்காக சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் விவாதத்தை உருவாக்கியுள்ளன.
சென்னை: மதுரவாயலில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்துவைக்க வரும் நடிகர் ரஜினிகாந்தை வரவேற்று சாலையோரங்களில் அவரது ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. ரஜினி மாற்ற வேண்டும் என்று சொன்ன சிஸ்டம் இது தானா என்று ட்விட்டரில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.
சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையை நடிகர் ரஜினிகாந்த் மாலை 3.30மணியளவில் திறந்து வைக்கிறார்.
அரசியல் அறிவிப்பிற்குப் பிறகு நடிகர் ரஜினி பங்கேற்கும் முதல் மேடை என்பதால் மதுரவாயல் வரும் ரஜினியை வரவேற்க சாலையோரங்களில் வாழ்த்து பேனர்கள் அனல் பறக்கின்றன. இன்று காலையில் தான் பேனர் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாக கூறியுள்ள நிலையில் சென்னையின் புறநகர் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள ரஜினி பேனர்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
|
நீங்க சொன்ன புது சிஸ்டம் இதுவா?
ரஜினிக்கு வைக்கப்பட்டிருக்கும் பேனர் குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். ரஜினி மாத்த வேண்டும் என்று சொன்ன புதிய சிஸ்டம் இது தானா என்று கேட்டுள்ளார் இந்த வலைபதிவர்.
|
நம்ம பேனரை வைக்கனும்
மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும். திமுக, அதிமுக பேனர், பிளெக்ஸ்க்கு பதிலா நம்ம பேனர், பிளெக்ஸ் வைக்கனும்னு ரஜினி ஸ்டைலில் பஞ்ச் டயலாக்கை பதிவிட்டுள்ளார் அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்.
|
ரஜினிக்கு எதுக்கு விளம்பரம்?
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நீங்க. உங்களுக்கு விளம்பரம் தேவையில்லை ரஜினி சார். உங்களுடைய ரசிகர்களிடம் சொல்லி பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கலாமே என்று ட்வீட்டியுள்ளார் இவர்.
|
எந்திரனுக்கு பேனர் வைக்கலாம்
சட்டம் உயிரோட இருக்கிற மனிதர்களுக்கு பேனர் வைக்க கூடாதுன்னு சொல்லியிருக்கு எந்திரத்துக்கு வைக்ககூடாதுன்னு சொல்லல. எங்க ரஜினி எந்திரன் எதிர் விமர்சனம் வைப்பவர்களுக்கு பதில் அளித்துள்ளார் இந்த ரசிகர்.
|
சந்தோஷப்படுங்க
பேனர் வைக்க மாட்டோம்னு #ரஜினி எப்போயா சொன்னாரு. இந்த சமூக ஆர்வலர்கள் பேச்சை கேட்டு கட்சி நடத்தினால் டெபாசிட் கூட தேறாதுன்னு அவருக்கு தெரியாதா என்ன!! ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யலன்னு சந்தோஷப்படுறத விட்டுட்டு பிரச்னையை கிளப்பாதீங்க என்று ட்வீட்டியுள்ளார் இந்த நெட்டிசன்
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications