"பாடி எந்திருச்சுருச்சு" கேஜிஎஃப் ராக்கி பாயாக மாறிய ரோஹித் சர்மா.. தெறிக்கவிட்ட ரசிகர்களின் மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்று புதிய வரலாறு படைத்தது. இந்த போட்டியின் சுவாரஸ்யங்களை வைத்து சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.

"சிவா மனசுல சக்தி" படத்தில் சந்தானத்தின் செல்ஃபோனை தொடர்ந்து ஜீவாவால் உடைக்கப்படும் போது, "பொண்ணுக்கும் எனக்கும்தான் செட்டாகலைனுதான்டா நினைச்சேன்.. ஃபோனுக்கும் எனக்கும் கூட செட்டாகவிட மாட்றீயேடா" என்று சொல்வார். இதில் வரும் சந்தானத்தை அப்படியே ரோஹித் சர்மாவாக மாற்றி, 15 முறை தொடர்ந்து டாஸ் தோல்வியடைந்ததை வைத்து, "டிராபிக்கும் எனக்கும்தான் செட்டாகலைனு நினைச்சேன்.. டாஸ்-க்கும் எனக்கும் கூட செட்டாக விட மாட்றீங்களேடா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா மொமண்ட்.

memes ind vs nz champions trophy final Rohit Sharma

"இங்கிலீஸ்காரன்" படத்தில் பங்காளி "சாப்பாடுல எலி தானா செத்து கிடக்கு.. சாம்பார்ல என்ன இருந்துச்சு தெரியுமா.. பெருச்சாளி" என்று ஒருவர் வடிவேலுவிடம் தூக்கி காட்டுவார். இதில் வரும் வடிவேலுவை இந்திய அணியாகவும், சாப்பிடுபவரை நியூசிலாந்து அணியாகவும் மாற்றி, "பங்காளி 250 ரன்களையே நாங்க டிஃபெண்ட் பண்ணி காட்டுறோம்.. பார்க்கிறீர்களா" என்று 2019 அரையிறுதியை நினைவுபடுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆத்தாடி ஆத்தி சிக்கிட்டோம்டா மொமெண்ட்.

memes ind vs nz champions trophy final Rohit Sharma

ஆதவன் படத்தில் சூர்யாவின் சேட்டையை பார்த்து வடிவேலு, "இதெல்லாம் குரங்கு பார்த்துச்சுன்னா அவமானத்துல சூசைட் பண்ணிக்குமே" என்று சொல்வார். இதில் வரும் சூர்யாவை கிளென் பிலிப்ஸாகவும், வடிவேலுவை ரசிகர்களாகவும் மாற்றி, சுப்மன் கில்லுக்கு பிடித்த அசத்தல் கேட்சை பார்த்து, "இதெல்லாம் குரங்கு பார்த்துச்சுன்னா அவமானத்துல சூசைட் பண்ணிக்குமே" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர்களின் ரியல் குமுறல்.

memes ind vs nz champions trophy final Rohit Sharma

கேஜிஎஃப் படத்தின் கிளைமேக்ஸில் வில்லனான கருடனை ஹீரோ ராக்கி ஒரே வெட்டில் சாய்த்துவிடுவார். அதில் வரும் கருடனாக நியூசிலாந்து அணியையும், ஹீரோவாக இந்திய அணியின் அத்தனை வீரர்களையும் வைத்து, "ராக்கி கருடனை கொன்னுட்டான் சார்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் இதுதான்டா கிரிக்கெட் மொமெண்ட்.

memes ind vs nz champions trophy final Rohit Sharma

ஜெர்சி படத்தில் தோற்று கொண்டே இருக்கும் நானி, நீண்ட போராட்டத்திற்கு பின் ரஞ்சி அணியில் இடம்பிடித்த பின், தனியாக ரயில் நிலையம் சென்று தனது வெற்றியை கத்தி ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். இதில் வரும் நானியாக கேஎல் ராகுலை மாற்றி, 2023 நவம்பர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியையும், தற்போதைய வெற்றியையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் கிளாசிக் ராகுல்டா நானு மொமெண்ட்.

memes ind vs nz champions trophy final Rohit Sharma

ஐயா படத்தில் தனது சாவுக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்பதை சோதித்து பார்க்க பிரகாஷ்ராஜ் செத்து போனதை போல் நடிப்பார். திடீரென கண்களை திறந்து அதிர்ச்சி கொடுப்பார். அதுபோல் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, ஓய்வு பெறும் எண்ணமே இல்லை என்றார். இதனால் ஐயா பிரகாஷ்ராஜாக ரோஹித் சர்மாவை மாற்றி, திடீரென கண்விழிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பாடி எந்திருச்சிருச்சு மொமெண்ட்,

memes ind vs nz champions trophy final Rohit Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+