அடிக்குது குளிரு.. சென்னையன்ஸ் நிலைமை இப்போ.. சூரியன் தலை காட்டுமா? .. ஜாலி மழை மீம்ஸ்
சென்னை: தீபாவளிக்கு மறுநாள் இருந்தே சென்னையில் அடை மழை ஆரம்பித்து விட்டது. தீபாவளிக்கு வாங்கிய பலகாரங்களும், அம்மா சுட்ட முறுக்கு, அதிரசமும் இருப்பதால் டிவி பார்த்துக்கொண்டே பொழுது போகிறது. சூரியனை பார்த்து முழுதாக 3 நாட்களாகி விட்டது. சென்னை கிளைமேட் ஊட்டி போல மாறி விட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலம்: நவம்பர் மாதத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். ஆண்டுதோறும் மழை காலத்தில் வெள்ள நீர் தேங்கும் என்பதால் சென்னைவாசிகளுக்கு மழை என்றாலே பயமும் பதற்றமும் சூழ்ந்து கொள்ளும். ரண களத்திலும் குதூகலம் காண்பவர்கள் சென்னையன்ஸ். மழைக்கு இதமாக சூடாக பஜ்ஜி போண்டா சாப்பிடும் அதே நேரத்தில் சில மீம்ஸ் தட்டி விடுவார்கள்.

நீடிக்கும் மழை: சில மீம்ஸ் பழசாக இருந்தாலும் இன்றைய சீசனுக்கு ஏற்றதாகவே இருக்கிறது. காரணம் கடந்த 2 நாட்களாகவே மழை நசநசவென பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை என்று வீட்டில் அமர்ந்து கொண்டாலும் வேலைக்காக வெளியே செல்பவர்களின் பாடுதான் படு திண்டாட்டமாக உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளதால் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குளுகுளுன்னு இருக்கணுமா: என்னடா இது மழை பகல் நேரத்தில நசநசன்னு பெய்யுதே என்று பலர் ஆதங்கப்படுவார்கள். அவர்களைப் பார்த்து உனக்கு நைட்ல மட்டும் குளுகுளுன்னு பெய்யணுமா என்று மழை கேட்பது போல மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஒரு பதிவர்.
லீவு தருவேன்: சம்மர் காலம் என்றாலே பள்ளி விடுமுறை காலம். முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடுவார்கள். மழை காலத்தில் சர்ப்ரைஸ் லீவு கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார் ஒரு மீம்ஸ் கிரியேட்டர்.

நவம்பர் மாத மழை: மழையில் நனைவது எல்லோருக்குமே பிடிக்கும். நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்று ஒருவர் பாட, அம்மாவோ கோபத்தோடு திட்டி வீட்டுக்கு வரச்சொல்கிறார். கிராமங்களில் வீட்டு மாடியில் இருந்து அருவியாய் கொட்டும் மழை நீரில் குளித்த நினைவு எத்தனை பேருக்கு வந்து போகுமோ தெரியலை.
பில்ட் அப்: வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள தயார் என்று நாங்க சொன்னா நீ தட்டி எறிய வந்துட்டியா எல்லாம் ஒரு பில்ட் அப்தான் என்கிறார் ஒரு சென்னைவாசி.

துணி காயலையே: தீபாவளிக்கு முன் துவைத்துப்போட்ட துணி இன்னும் காயலையே.. நீ எப்ப வருவே என்று சூரியனைப் பார்த்து கேட்கிறார் ஒரு நெட்டிசன். சூரியனின் அருமை மழை காலத்தில்தான் தெரிகிறது.

பாண்டிச்சேரியன்ஸ்: புதுச்சேரி, காரைக்காலில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நாம பாண்டிச்சேரியில இருக்கோமா? ஊட்டியில இருக்கோமா என்று ஒரு நெட்டிசனுக்கு டவுட் வந்து விட்டது.

சென்னை குளிர்: சென்னை என்றாலே பலருக்கும் சுட்டெரிக்கும் வெயில்தான் நினைவுக்கு வரும். இப்போதோ குளிர் வாட்டி வதைக்கிறது. சூரியன் 2 நாட்களாக தென்படவில்லை. ஸ்வெட்டர் தேட ஆரம்பித்து விட்டனர் சென்னைவாசிகள். நான் ஊட்டியில இருந்துதான் பேசுறேன் என்று மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

என்ஜாய்: மழை காலம் வந்தால் அதைப்பார்த்து பயப்படாமல் அனுபவியுங்கள். இல்லாவிட்டால் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் வந்து விடும். சென்னைவாசிகளே மீம்ஸ்களை ரசிப்பதோடு சூடாக சாப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் கவனமாக இருங்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications