“மேம்பாலத்திற்கு மிக அருகில்.. அவசர பார்க்கிங் வசதியுடன்”.. இதோ கிளம்பிட்டாங்கள்ல!
சென்னை : மழை விட்டாலும் மழை பற்றிய மீம்ஸ்களைப் பகிர்வதை நிறுத்தவில்லை நம் குறும்புக்கார நெட்டிசன்கள். அதுவும் ரெட் அலர்ட்டுக்காக அவசரப்பட்டு வாங்கிய நூடுல்ஸ் மற்றும் பிரட் பாக்கெட்டுகளை வைத்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
இயற்கை எப்போதுமே கணிக்க முடியாததுதான். அதிலும் இந்த மழை.. சொல்லவே வேண்டாம்.. மழையை நம்பி ஒரு துணியைக்கூட மாடியில் நிம்மதியாக காயப்போட முடியாது. வெயில் அடிக்கிறது என நம்பி துணியைக் காயப்போட்டால், எங்கேயோ ஒளிந்து கொண்டிருந்த கருமேகங்கள் திடீரென வந்து மழையைக் கொட்டும். சரி, மழை பெய்கிறது என நாம் காயப்போட்ட துணியை எடுத்துக் கொண்டு நாலு படி இறங்குவதற்குள் மழை காணாமல் போய் சூரியன் வந்து சுட்டெரிக்கும்.

இப்படி சாதாரண துணிக்கே நம்மை கடுப்படிக்க வைக்கும் மழை, இந்த முறை காரை வேளச்சேரி பாலத்தில் கொண்டு பார்க் செய்யும் அளவிற்கு செய்து விட்டது. அதோடு, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என கலர்கலராக வேறு அலர்ட் கொடுக்கப்பட்டதால், எப்படியும் மழை வைத்து செய்யப்போகிறது என பத்து நாட்களுக்கு தேவையான பிரட், பால், நூடுல்ஸ் என எல்லாவற்றையும் வாங்கி பத்திரப்படுத்தினார்கள் நம் மக்கள்.
ஆனால் வழக்கம்போல் நம்மை அலர்ட்டாக்கி விட்டு, சத்தமில்லாமல் ஆந்திரா பக்கம் ஓடி விட்டது இந்த மழை. இதனால் நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே என கவலையில் இருக்கும் மக்கள், சமூகவலைதளங்களில் இதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..








-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications