பயபுள்ள அமரன் படம் பார்த்துடுச்சு போல.. அதான் நாமளும் ராணுவத்துல சேரலாமாடானு மெசேஜ் பண்ணுது!
சென்னை : அமரன் படத்தைப் பார்த்து மக்கள் உருகி வரும் வேளையில், அதை தங்களது நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டு நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
புதிதாக எந்தப் படம் வந்தாலும் அதைக் கொண்டாடவும் சரி, திட்டித் தீர்க்கவும் சரி அல்லது விமர்சிக்கவும் சரி, சமீபகாலமாக மீம்ஸ்களைத் தான் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர் நம் மக்கள். படத்தின் மொத்தக் கதையையுமே ஒரே ஒரு டெம்ப்ளேட்டில் மீம்ஸ்களாக பகிர்ந்து விடும் அளவிற்கு நம் மக்களின் கற்பனை அதிகமாகி விட்டது.
தற்போதும் அப்படித்தான், வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அமரன் படத்தையும் சமூகவலைதளப் பக்கங்களில் மக்கள் கொண்டாடி வரும் சூழலில், வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் தங்கள் ஸ்டைலில் விதவிதமான மீம்ஸ்களாக விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நாட்டுக்காக தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பாடுபடும் ராணுவ வீரர்களின் வாழ்க்கைப்படம் என்பதால், தங்கள் மீம்ஸ்களிலும் கண்ணியத்தைக் கடைபிடித்துள்ளனர் நெட்டிசன்கள். ஆனால் கலகலப்புக்கும் பஞ்சமில்லாமல் அவர்கள் மீம்ஸ்களாக்கி இருக்கும் விதம் ரசிக்கும்படி உள்ளது.
சூர்யவம்சம் படம் பார்த்தாலே பஸ் வாங்கலாமா என திட்டமிடுவார்கள் எனக் கலாய்க்கும் நம் நெட்டிசன்கள், அமரன் படத்தைப் பார்த்துவிட்டு ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறார்கள் என தங்கள் நண்பர்களைக் கலாய்த்துள்ளனர். அதேபோல், சாய்பல்லவி மாதிரி மனைவியை எதிர்பார்த்து வீட்டுக்குச் செல்பவர்களுக்கு மைனா சூசன் மாதிரிதான் மனைவி இருக்கிறார்கள் என சைடுகேப்பில் வீட்டுப் பிரச்சினையையும் மீம்ஸ்களாகப் பேசியுள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான அமரன் படம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications