மதுரை சூப்பர் கிங்ஸ்சுன்னு பெயரை மாத்துனா விளையாட விடுவீங்களா யுவர் ஆனர்?
சென்னை: சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்களுக்கு, 2 வருட காலம் ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு விதிக்கப்பட்ட தடையால், அதிர்ச்சியடைந்திருந்தாலும், அதையும் நகைச்சுவையாக மாற்றி சமூக வலைத்தளங்களில் கவலையை மறந்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள்.
குறிப்பாக டிவிட்டரில் பல்வேறு மீம்ஸ்களையும், டயலாக்குகளையும், வீடியோக்களையும் ஷேர் செய்துவருகின்றனர் ரசிகர்கள். அப்படி சுவாரசியமான சில பதிவுகளை இப்போது பார்க்கலாம்.
|
மதுரை சூப்பர் கிங்ஸ்
டெல்லியைவிட்டு, தொலைவில் தமிழ்நாடு இருப்பதால்தான் முன்னேறவில்லை, எனவே அப்படியே தமிழ்நாட்டை தூக்கி டெல்லி பக்கம் வைக்கலாம் என்று மேப்பை பார்த்து ஒரு படத்தில் வடிவேலு சொல்வார். அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால்தானே பிரச்சினை, மதுரை சூப்பர் கிங்சுன்னு பெயரை மாற்றலாமா என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். விளையாட்டாக இவர் சொல்வதும் உண்மைதான். உரிமையாளர் மாறி, அணி பெயரும் மாறினால் விளையாட அனுமதியுண்டு.
|
நீங்களே விளையாடுங்க
லிங்கா திரைப்படத்தில், அணையை கட்டிகொடுக்கும் ரஜினி கதாப்பாத்திரம் அவமானத்திற்குள்ளாகி வெளியேற்றப்படும். அப்போது, அணையை தகர்க்கட்டுமா, நீ வெளியேறுகிறாயா என்ற கேள்வி ஊராரால் முன்வைக்கப்படும். அணையை தகர்க்க வேண்டாம், நான் போகிறேன் என்று தியாகம் செய்வார் ரஜினி. இந்த டிவிட்டில் ரஜினி கதாப்பாத்திரம் சிஎஸ்கே அணியோடு ஒப்பிடப்பட்டுள்ளது.
|
தொட்டுக்கோங்க
சென்னை எப்போதுமே சிறப்பாக ஆடும் அணி. அந்த அணி இல்லாத இந்த 2 வருடங்களில் மற்ற அணிகள் கப்பை தொட்டு பார்த்துக்கொள்ளலாம் என்று பிற அணிகளை கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
கடவுளே நாங்கதான்
'கிரிக்கெட் ஒரு மதம் என்றால் சச்சின்தான் கடவுள்' என்ற வார்த்தை பிரபலம். இந்த நெட்டிசன் அதை, ஐபிஎல் ஒரு மதம் என்றால், சென்னை அணிதான் அதில் கடவுள் என்று கூறி அணியின் முக்கியத்துவத்தை தெரிவித்துள்ளார்.
|
என்ன பேச்சு பேசுனீங்க
சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிக்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் மட்டுமல்ல. அதை வெறுக்கும் தமிழ் ரசிகர்களும் உள்ளனர். அப்படி ஒரு டிவிட்தான் இது. விவேக் மற்றும் வடிவேலு கதாப்பாத்திரங்கள் அடிபட்டு படுத்திருக்கும் சினிமா காட்சியை சென்னை-ராஜஸ்தான் அணிகளோடு ஒப்பிட்டு மீம்ஸ் போட்டோ போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
ஸ்ரைட்டா ரிட்டையர்டுதான்
சென்னை அணியாவது பரவாயில்லை. ஆனால் ராஜஸ்தான் அணியில் சீனியர் வீரர்கள் ஆதிக்கமே உள்ளது. 2 வருடம் தடைக்கு பிறகு அந்த அணியில் அத்தனை பேரும் ரிட்டையர்ட் ஆகிவிடுவார்களே என்று கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
அண்ணே ஆசீர்வாதம்
சின்னகவுண்டர் படத்தில் சலவை செய்யமாட்டேன் என்று உட்கார்ந்திருக்கும் கவுண்டமணியிடம், செந்திலும், வடிவேலுவும் வந்து நாங்க சலவை செய்ய போறோம். ஆசீர்வாதம் செய்யுங்க என்று கேட்பது போல காட்சி இருக்கும். இந்த நெட்டிசன் டோணியை கவுண்டமணியாகவும், செந்தில் மற்றும் வடிவேலுவை, கோஹ்லி மற்றும் தவான் ஆகியோராகவும் ஒப்பிட்டு மீம்ஸ் செய்துள்ளார்.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
கேப்டன்சியில் இருந்து விலகும் ஹர்திக்! மும்பையிடம் வாங்க முயற்சிக்கும் சிஎஸ்கே.. ஜாக்பாட் அடிக்குமா? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications