இது லிஸ்ட்லயே இல்லையே.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் மீம்ஸ்.. ஆர்சிபிக்காரங்க தான்யா பாவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே vs குஜராத் அணி பைனல் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று மழை காரணமாக இன்று ரிசர்வ் டே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் போட்டி நடக்காமல் போன அந்த கோப்பையை சென்னைக்கு தருவார்களா, குஜராத் அணிக்கு தருவார்களா என்று விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும், ஆர்சிபி ரசிகர்களும் கோப்பையை தங்களுக்கு தர வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைப்பது போல் மீம்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதனை இப்போது பாப்போம்.

csk vs gt final match memes, a meme video about Mumbai Indians want ipl cup

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி அகமதாபத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. நேற்று அகமதாபாத்தில் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பலத்த மழை காரணமாக ஆடுகளத்தின் தன்மை மோசமாக இருந்த காரணத்தால், சிஎஸ்கே மற்றும் குஜராத் அணி கேப்டன்களிடம் கலந்து ஆலோசித்த ஐபிஎல் அணி நிர்வாகம் இறுதிப்போட்டியை நாளை அதாவது இன்று நடைபெறும் என்று ஒத்திவைத்தது. இதன் படிஇன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதப்போகின்றன.

இந்நிலையில் இன்றும் ஒருவேளை போட்டி நடைபெறாமல் போனால், குவாலிபையரில் குஜராத்தை தோற்கடித்த சிஎஸ்கேவிற்கு கோப்பையை தருவார்களா அல்லது தகுதி சுற்றில் சிஎஸ்கேவை தோற்கடித்த குஜராத்திற்கு தருவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இரண்டு அணிகளும் விளையாட முடியாத காரணத்தால் இந்த கோப்பையை அதிக முறை வாங்கிய Mumbai Indians அணிக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...என்று சரத்குமார் வடிலுவேலின் தங்கப்ப தக்கம் மீம்ஸை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

இன்னொரு மீம்ஸ் வீடியோவில், ஆர்சிபி வீரர்கள் , ஐபிஎல் கோப்பை குறித்து உருக்கமாக பேசுவது போன்று வீடியோ ஒன்று பரிதாபங்கள் கோபி சுதாகரை வைத்து வெளியிட்டுள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுவது எல்லாம் ஸ்கிரிப்ட் ஸ்கிரிப்ட்டுன்னு சொல்றீங்களே, இந்த ஒரு ஸ்கிரிப்ட்லயாவது ஆர்சிபி அணியை ஜெயிக்க வச்சுருக்கலாம்ல.. பல வருசமாக போராடிக்கொண்டு இருக்காங்க.. பார்க்கவே பாவமாக இருக்கு என்று சுதாகர் கோபி பேசிக்கொள்ளும் மீம்ஸ் வீடியோ பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+