என்ன பெரிய நோ பார்க்கிங்.. ரெயின் பார்க்கிங் பார்த்திருக்கியா நீ!
சென்னை : பெங்கல் புயலே கரையைக் கடந்தாலும், மீம்ஸ் புயல் வீசுவதை நிறுத்தவில்லை நம் நெட்டிசன்கள்.
அதோ இதோ என போக்குக் காட்டி வந்த பெங்கல் புயல் ஒரு வழியாகக் கரையைக் கடக்க ஆரம்பித்து விட்டது. கடந்த ஒரு வாரமாகவே பெங்கல் புயல் ஊடகங்களில் செய்தியாக அடி பட்டு வந்தது போல், சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களாக அதிகம் பகிரப்பட்டு வந்தது.
பெங்கல் என அதன் பெயரை வைத்து கொஞ்சம் மீம்ஸ், அது புயலாக மாறுமா இல்லை மாறாதா என்பதை வைத்து கொஞ்சம் மீம்ஸ், பின்னர் அது புயலாக மாறிய பின் அது மெல்ல மெல்ல நகருவதை வைத்து கொஞ்சம் மீம்ஸ், தற்போது அது கரையை மெதுவாக கடந்து வருவதை வைத்து கொஞ்சம் மீம்ஸ் என விதவிதமாக மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
போதாக்குறைக்கு கனமழை எச்சரிக்கையால் வெள்ளம் வந்து விடுமோ என மக்கள் பாலங்களில் வாகனங்களை நிறுத்துவது, வெள்ளம் வந்தால் எப்படித் தப்பிப்பது என எல்லாவற்றை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில பெங்கல் புயல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications