அடி தூள்.. அதிமுகவும், திமுகவும் "இதை" செய்தால் போதும்.. குடும்ப தலைவிகளுக்கு ரூ.2500.. தெறி மீம்ஸ்
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு "உரிமைத் தொகை" வழங்குவதாக வெளியான அறிவிப்பு பற்றி தான் இப்போது பரபரப்பாக பேசுகிறது தமிழகம்.
மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதாவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஆறு மாதத்திற்கு சிலிண்டர் இலவசமாக தரப்படும் என்றும் கூறியுள்ளார் முதல்வர். இதன் மூலம் மகளிர் வாக்குகளுக்கு மொத்தமாக குறி வைத்துள்ளது அதிமுக.

சுதாரித்த அதிமுக
அதிமுகவுக்கு எம்ஜிஆர் காலம் முதல் மகளிர் வாக்குகள் மிகப்பெரிய பலமாக இருக்கின்றன. ஜெயலலிதா அதை இன்னமும் பலப்படுத்தினார் என்று சொல்லலாம். எனவே திமுகவின் வாக்குறுதி அந்த வாக்கு வங்கியில் கை வைப்பது போல இருப்பதை உணர்ந்து உடனே சுதாரித்து விட்டது அதிமுக. கூடுதல் நிதி வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஆறு மாதங்கள் சிலிண்டர் இலவசம் என்று அறிவிப்பு பெண்கள் மனம் குளிர வைத்துள்ளது.

மீம்ஸ்கள்
இப்படி மாறி மாறி இரு கட்சிகளும் குடும்பத் தலைவிகளுக்கு நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில்தான் பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதில் ஒரு மீம்ஸ், எல்லா வாட்ஸ்அப் குரூப்களிலும் தவறாமல் இடம் பிடித்துள்ளது.

அதிக பணம் கிடைக்குமே
அப்படி என்ன மீம்ஸ் தெரியுமா? இருவரும் குடும்ப தலைவிகளுக்கு கரிசனமாக, பணத்தை வாரி வழங்குவதாக கூறுகிறீர்களே, அப்படியானால் நீங்கள் இருவரும் கூட்டணி வைத்துக்கொண்டு, மாதம் 2,500 ரூபாய் கொடுக்கலாமே என்று கேட்கிறது அந்த மீம்ஸ். அதாவது, 1000+1500=2500. இது எப்படி இருக்கு?

இரு கட்சி கூட்டணி
இது சிரிக்க வைப்பது போல இருந்தாலும், இரண்டு கட்சிகளும் இவ்வாறு அறிவித்துக் கொள்வதால் செய்திகள் முழுக்க மற்றும் மக்கள் கவனம் முழுக்க இந்த இரு கட்சிகள் மீது தான் இருக்கிறது. மூன்றாவது அணி மீது கவனம் திரும்புவதை இந்த அறிவிப்புகள் தடுக்க முற்படுகின்றன என்று தான் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் மறைமுகமாக இப்போதைய இரு கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. தங்கள் மீது மட்டுமே மக்களுக்கு கவனம் இருக்க இந்த அறிவிப்புகள் அவர்களுக்கு உதவும் என்று சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications