இவன்தாண்டா உண்மையான ‘இளந்தாரி பய’.. இணையத்தைக் கலக்கும் மீம்ஸ்!
‘எளந்தாரி பய’ மீம்ஸ் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை : சமூக வலைதளங்களில் தினசரி ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆவதும், அதைத் தொடர்ந்து மீம்ஸ்கள் பறப்பதும் வழக்கமான விஷயம். சமயங்களில், சில டெம்ப்ளேட்கள் ட்ரெண்டாகி, அதையொட்டி பல வகைகளிலும் மீம்களை தெறிக்க விடுவார்கள் நெட்டிசன்கள். அப்படி கடந்த ஓரிரு நாட்களாக நடிகரும் எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தி புகைப்படத்துடன் "எளந்தாரி" மீம்ஸ் இணையத்தைக் கலக்கி வருகிறது.
பிரான்மலை என்ற திரைப்படத்தில் வேல.ராமமூர்த்தி பேசும் "எலும்ப எடுத்துக் கடிடா எளந்தாரி புள்ள.. விடிஞ்சு எந்திரிச்சு நல்லா எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டு வெடக்கோழி அடிச்சி, மெதக்க மெதக்க நல்லெண்ணய ஊத்தி சுடச்சுட ஒரு சட்டி குழம்ப குடிச்சிட்டு, தூக்கம்போட்டு எந்திரிச்சம்னா, எவனடா தூக்கிப்போட்டு மிதிக்கலாம்னு இருக்கும்.. அதாண்டா எளந்தாரி புள்ளைக்கு அர்த்தம்" என்ற வசனம் ட்ரெண்டாகி வருகிறது.
அதையொட்டி 'இளந்தாரி பய' டெம்ப்ளேட்டில் நெட்டிசன்கள் மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில மீம்கள் இங்கே..

ஊறுகா எங்கம்மா
சோத்துக்கு தொட்டுக்க வகைவகையா கூட்டு, பொரியல்னு இருந்தாலும்...
முட்டை எங்கம்மானு ? கேக்குறவன் தான்டா உண்மையான இளந்தாரி பய.

விலகி போறவன்
என்ன தான் உயிருக்கு உயிரா நேசிச்ச பொண்ணா இருந்தாலும் பிடிக்கலைன்னு சொல்லிட்டா
எந்த பிரச்சனையும் பண்ணாம விலகி போறவன் தான்டா இளந்தாரி பய.

குடும்பத்துக்காக
ஆயிரத்தெட்டு ஆசை இருந்தாலும் அத்தனையையும் குடும்பத்துக்காக பொறுத்துக்கிட்டு சனி, ஞாயிறு கூட வேலைக்கு போறவந்தாண்டா உண்மையான இளந்தாரி பய

என்ன கொழம்பு
அப்பா செருப்பால அடிச்சி வீட்ட விட்டு வெளியே போடா சொன்னாலும்,
5 நிமிஷத்துக்கு அப்பறம் வீட்டுக்குள்ள போயி என்ன கொழம்புனு கேக்குறவன் தான்டா உண்மையான இளந்தாரி பய.

எம்.எல்.ஏவையே
பணம் கொடுத்து ஓட்டு வாங்குறவன விட ஜெயிச்ச அப்புறம் எம்எல்ஏவ வாங்குறவன்தான்டா உண்மையான இளந்தாரி பய.

நேரா பந்திக்கு போய்
கல்யாணத்துக்கு போனா ரிசப்ஷன் ஹாலுக்கு போகாம நேரா பந்திக்கு போய் சாப்பிடறான் பாரு அவன் தான்டா உண்மையான இளந்தாரி பய...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications