குணசேகரன் இஸ் பயர்.. குடும்பமும் வேண்டாம், குட்டியும் வேண்டாம்.. குமுறும் ஆண்களின் சண்டே மீம்ஸ்
சென்னை: ஆண்களின் குமுறலை மையப்படுத்தி எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆண் ஆதிக்க மனப்பான்மை உள்ள குணசேகரன் பேசும் அந்த வசனத்தை சிலர் அடிக்கடி கட் செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைக்கிறார்கள். அதனை இப்போது பார்ப்போம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் இந்த தொடரை இயக்கி வருகிறார். மதுரையில் உள்ள அண்ணன் தம்பிகள் நான்கு பேர் பற்றிய கதையாக எதிர் நீச்சல் இருக்கிறது.

இந்த எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிகர் மாரிமுத்து நடித்து வருகிறார். குணச்சித்திர வேடங்களில் அதிக அளவு நடித்து வந்த மாரிமுத்து இதில் குணசேகரனாகவே வாழ்ந்து வருகிறார்.
தமிழ் சீரியல்களில் டிஆர்பிஇல் டாப் இடத்தில் உள்ள எதிர்நீச்சல் கதை என்பது ஆணாதிக்க மனப்பான்மை உள்ள அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து கொண்ட பெண்கள் அவர்களை எதிர்த்து களமாடுவதுதான். ஆணாதிக்க மனப்பான்மை உள்ள நெகட்டிவ் ரோலில் குணசேகரன் என்ற கேரக்டரில் மாரிமுத்து நடித்து வருகிறார்.
அதில் குணசேகரனாக அவர் பேசிய பல வசனங்கள் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஆகவும், சிறிய வீடியோக்களாகவும் பரவி வருகிறது. பெண்களுக்கு எதிராக குணசேகரன் பேசும் வசனங்களை கட் செய்து அதனை பலர் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஸ்டேட்டஸ் ஆக வைக்கிறார்கள்.
🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/RunbGfcl1a
— திருட்டுகுமரன் (@ThirutuKumaran) July 5, 2023
அண்மையில் குணசேகரன் பேசிய வீடியோவை தங்கள் நிஜவாழ்க்கையை தொடர்பு படுத்தி மீம்ஸ் வீடியோக்களை இளைஞர்கள் கிண்டலுக்காக வெளியிடுகிறார்கள். அப்படி வெளியான ஒரு வீடியோ பற்றி பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்க அனைவரும் ஒன்றாக சந்தித்து பேசி, தங்களுக்கு பிடித்த படி பார்டி கொண்டாடி மகிழ்வார்கள். இதற்கு நிறைய பெண்கள் தங்கள் கணவன்களை அனுமதிப்பது இல்லை. இதனால் வீடுகளில் சண்டையே நடக்கும். ஞாயிறுகளில் வெளியில் போக வேண்டும் என்று பெண்கள் அடம்பிடிப்பார்கள்.அத்துடன் ஷாப்பிங்கும் அன்றுதான் நடக்கும். அதற்குபயந்து தப்பிக்க முயன்றால் சிக்கல் தான். பொங்கி விடுவார்கள்.
அப்படி ஞாயிறுகளில் நண்பர்கள் சந்திப்பு நடக்காத போது, நண்பர்களிடம் ஹேங்அவுட்டில் பேசும் போது, "குடும்பமும் வேண்டாம், குட்டியும் வேண்டாம், தம்பிமார்களே, எல்லாம் ரெடியாகிக்கங்கப்பா, அவனவன் டைவர்ஸ் பண்ணி அத்துவிடுங்கப்பா" என்று குணசேகரன் போல் பேசுவதாக வீடியோவை ஷேர் செய்துள்ளார்கள். இந்த மீம்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications