காயத்ரியை மட்டும் நல்லவராகவே காட்டினீங்க... பிக்பாஸுக்கு நெட்டிசன்ஸ் வார்னிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியை நல்லவர்போல் காட்டுவதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஜூலியை டார்கெட் செய்த காயத்ரி தற்போது ஜூலியுடன் கூட்டணி சேர்ந்து ஓவியாவை படாதபாடு படுத்தி வருகிறார். இதனால் காயத்ரி மீதும் ஜூலி மீதும் ரசிகர்கள் கடும் கோப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் காயத்ரியை நல்லவராக காட்ட முயற்சிக்கும் பிக்பாஸ் ஓவியாவுக்கு காயத்ரி ஆறுதல் கூறுவதுப் போல் காட்சியமைத்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 ரசிகர்கள் எச்சரிக்கை

ரசிகர்கள் எச்சரிக்கை

காய்தரியை நல்லவராக காட்ட முயற்சித்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்றும் எச்சரித்துள்ளனர். காயத்ரியின் தாயார் கிரிஜா ரகுராம், நடிகர் கமல்ஹாசனுக்கும் விஜய் டிவிக்கும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் நல்லவர் போல் காட்டப்படுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களை இழப்பீர்கள்

விஜய் டிவி காயத்ரியை நல்லவர் போல் காட்ட ஸ்க்ரீன் பிளே செய்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களை இழப்பீர்கள் என கூறுகிறது இந்த டிவிட்..

கவன் படம் மாதிரி இருக்கு

காயத்ரியை நல்லவரா காட்டணும் அவ்ளோதான, இப்ப எப்படி ஸ்க்ரிப்ட்டை மாத்துறேன்னு பாரு, கவன் படம் பாக்குற மாதிரியே இருக்கிறது என்கிறது இந்த டிவிட்

Bigboss show, Gayathri Raghuram kisses Kamal Hassan- Filmibeat Tamil

ஸ்க்ரிப்ட் அப்படி தான் இருக்கு

அடுத்து வரும் எபிசோடுகளில் ரைசா மற்றும் ஜூலி மட்டுமே கெட்டவர்களாக காட்டப்படுவார்கள், ஸ்க்ரிப்ட் அப்படி தான் இருக்கு என்கிறது இந்த மீம்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Biggboss shows gayathri raguram as good. But fans not accepting this. Fans are telling if Vijay tv Portray Gayathri as good they will not watch biggboss.
Please Wait while comments are loading...