ஏன் இந்த சூப் டே, லவ் பெய்லியர் டே இதெல்லாம் கொண்டாடக் கூடாதா?... தெறிக்க விடும் நெட்டிசென்கள்
சென்னை: இந்த காதலர் தினத்தை பீச், பார்க், ஹோட்டல், தியேட்டர் என்று காதலர்கள் சந்தோஷமாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில் இன்னும் காதலிக்காத, காதலில் விழாத வாலிபர்கள் காதலர் தினத்தை கொண்டாட முடியாத சோகத்தில் உள்ளுக்குள் அழுது புலம்பிக் கொண்டு இருக்கின்றனராம்.
அதிலும் வெளியில் கெத்தாக பணம் செலவாகவில்லை, சந்தோஷமா இருக்கேன் என்று கூறினாலும் கூட இந்த சோகத்தை ஆற்ற வழி தெரியாமல் மீம்ஸ் போட்டு தேற்றி வருவதாகக் கேள்வி.
இந்த காதலர் தினம் சிங்கிளா இருக்கற பசங்க வாழ்க்கையில எவ்ளோ பெரிய துக்கத்தைக் கொடுத்திருக்குன்னு பார்க்கலாம்.

காதலர் தினம் முன், பின்
காதலர் தினத்துக்கு முன்னாடியும், பின்னாடியும் என்னோட பர்ஸ் வெய்ட் கொறையவே இல்லை. ஏன்னா எனக்குதான் காதலியே இல்லையே. என்று பணம் குறையாத பர்ஸைப் பார்த்து சிங்கிள் பாய்ஸ் சந்தோஷப் பட்டுக் கொள்கின்றனராம்.

காதலர் தினத்துல
காதலர் தினத்துல என் ஜூனியர், சீனியர், நண்பன், உறவுக்காரப் பையன் எல்லோருக்கும் ஆள் இருக்கு. ஆனா நான் இன்னும் சிங்கிளா இறுதிச்சுற்று மாதவன் மாதிரி சுத்திட்டு இருக்கேன் என்று வருத்தத்துடன் சொல்கின்ற மீம்ஸ்.

நமக்கு நாமே தான்
ஆள் இருக்கற பசங்களுக்கு அவங்களோட காதலி வந்து நெற்றியில திருநீறு பூசுவாங்க. ஆனா நமக்கு வடிவேல் பாணி தான் சரி என்று தேற்றிக் கொள்ளும் பசங்களின் நிலை இது.

சூப் டே, லவ் பெய்லியர் டே
காதலி இருக்கறவங்க காதலர் தினம் கொண்டாடறாங்க ஆனா இல்லாதவங்களுக்கு ஏன் சூப் டே, லவ் பெய்லியர் டே இல்லை என்று பராசக்தி சிவாஜி கணேசன் சோகத்துடன் கேட்கிறாராம். அது சரி

உங்களோட பிளான் என்ன
யாராவது உங்களோட காதலர் தினம் திட்டம் என்னன்னு கேட்டா பேசாம கவுண்டமணி மாதிரி இப்படி சொல்லிடுங்க. அப்புறம் யாராவது வந்து கேட்பாங்க?

கெத்து காட்டிட்டு
பேஸ்புக்ல சிங்கிள் பசங்கதான் கெத்துன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து இப்படித்தான் குமுறிக்குமுறி அழறாங்களாம்.

காதலர் தினம் கொண்டாடறது
தம்பி காதலர் தினம் கொண்டாடறது தப்பில்ல. ஆனா எல்லா வருஷமும் அதே பொண்ணு கூட கொண்டாடனும் அதுதான் முக்கியம்" காதலி இல்லைங்கிறத எப்படியெல்லாம் மறைக்க வேண்டியிருக்கு.
இதுபோல சிங்கிள் பசங்க பலரும் மீம்ஸ் போட்டு காதலர் தினத்தை துக்க தினமாக கொண்டாடி வருவதால் இணையத்தைத் தெறிக்க வைத்துக் கொண்டிருக்கிறது காதலர் தின மீம்ஸ்.












Click it and Unblock the Notifications