அது 251 இல்ல ப்ரோ... "420".. ஆஹா ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்களே.. நிறுத்த மாட்டாங்களே!
சென்னை: மொத்த மக்களுக்கும் தற்போது பிடித்த எண் என்றால் அது 251 தான். சும்மாவே செல்போன் மோகம் பிடித்தாடும் மக்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட் போன் என்றால் ஒன்றுக்கு இரண்டாகத்தானே வாங்கத் தானே தோன்றும்.
அப்படித் தான், ‘ஃப்ரீடம் 251' போனை வாங்க வரிசை கட்டி நின்றார்கள் நம் மக்கள். ஆனால், ஆர்டர் அளித்த பின் தான், போன் 4 மாதங்களுக்குப் பிறகு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என இந்த மலிவு விலை போனை ஆர்டர் செய்ய முடியாதவர்களும், ஆர்டர் செய்தும் நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் கையில் போன் கிடைக்கும் என தெரிந்தவர்களும் தங்களது மனக்குமுறல்களை மீம்ஸ்களாக கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

வரும் ஆனா வராது...
ஒரு படத்தில் குறுகிய காலத்தில் வேலையே செய்யாமல் பணக்காரர் ஆவது எப்படி என வடிவேலுக்கு, பார்த்திபன் ஐடியா தருவார். அதை வைத்து இந்த மீம்ஸை தயாரித்துள்ளனர்.

காத்துட்டு இருக்கேன்...
தேசிய அளவு விசயம் என்றாலும், நம்மூர் ஆட்களையும் சேர்த்துக் கலாய்த்தால் தானே மீம்ஸ் கலைகட்டும். அப்படியாக இந்த மீம்ஸில் நாஞ்சில் சம்பத்தின், ‘காத்திட்டு இருக்கேன்'-ஐ, ஃப்ரீடம் 251 உடன் கோர்த்து விட்டுள்ளனர்.

அது 251 இல்லப்பா... 420
இவ்வளவு குறைவான விலைக்கு எப்படி ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய முடியும் என்ற பரவலான புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இது அதுக்கான ஸ்பெஷல்.

அவசரப்பட்டுடீயேடா...
இது பார்த்திபன் - வடிவேலு ஸ்டைல். அவசரப்பட்டு அதிக விலைக்கு வாங்கிட்டியே...

வெப்சைட்டை எப்ப சார் தொறப்பீங்க...
பிரபா ஒயின்ஸ் விளம்பரக் காமெடியை வைத்து கலாய்த்துள்ளனர். உண்மையிலேயே இந்தப் போனை ஆர்டர் செய்ய இப்படித்தான் மக்கள் காத்திருந்தனர்.

என்ன பெருமை இது...
நாட்டில் எவ்வளவோ பொருளாதாரப் பிரச்சினை இருக்கும் போது, இது ரொம்ப முக்கியமா..?

இப்டித் தாங்க நடந்துச்சு...
நாட்டில் நடக்கும் சமூக ஏமாற்று வேலைகளைத் தொகுத்து ஒரே படமாகத் தந்தது தான் சதுரங்க வேட்டை. ஆசையைத் தூண்டுனால், யாரையும் எளிதில் ஏமாற்றி விடலாம் என்பதே இதன் தாரக மந்திரம்.

இங்க தான் நாம நிக்கிறோம்...
பேரம் பேசி வாங்குவதில் நமக்கு இணை நாமே தான். எவ்வளவு தான் விலைக் குறைத்துக் கொடுத்தாலும், அதிலும் குறைக்கச் சொல்லி பேரம் பேசி வாங்கினால் தான் நமக்கு திருப்தியே. பின்ன கஷ்டப்பட்டு சம்பாரிக்கறதை சும்மா தூக்கிக் கொடுக்க முடியுமா?
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications