என்ன சன்டே.. இப்டி ஒரே நாளுல ரெண்டாயிரம் ரூபாவ முடிச்சுக்கட்டிட்டு போய்ட்டியே.. இது நியாயமா?
சென்னை: என்னதான் முகூர்த்தங்கள் வரிசை கட்டினாலும், வீட்டில் அசைவ சாப்பாடு சாப்பிடாமல் நம் நெட்டிசன்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முடியாதே.. அதனால்தான் மறக்காமல் விருந்து சாப்பிட்ட கையோடு விதவிதமான மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களை கமகமக்க வைத்து வருகின்றனர்.
இன்று ஆவணி முதல் முகூர்த்தம் என்பதால் பல வீடுகளில் கிச்சனுக்கு லீவே விட்டு விட்டார்கள். குடும்பத்தோடு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் கேரியரிலும் வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பாடு வாங்கி வந்து விட்டால், இன்றைய மதிய சமையல் முடிந்து விடும் என இல்லத்தரசிகள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க...
என்னதான் விதவிதமாக சைவச் சாப்பாடு சாப்பிட்டாலும், ராஜ்கிரண் மாதிரி நல்லி எலும்பை ஒரு பிடி பிடித்தால்தான் நம் அசைவப் பிரியர்களுக்கு ஞாயிறு ஞாயிறாக இருக்கும் என நம் மக்கள் வேறு கணக்கு போட்டு விட்டார்கள் போலும். அதனால்தான் வழக்கம் போல, இந்த ஞாயிறும் சமூகவலைதளப் பக்கங்களில் விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications