கடைக்கு போறதுக்குனே பிறந்தவன்டா நீ.. அதனாலதான் உன்னை கடைக்குட்டினு கூப்டுறோம்!
சென்னை : 'கடைக்குட்டியாய் பிறந்தது ஒரு குத்தமா? கடைக்குப் போ.. கடைக்குப் போனு அனுப்பியே டார்ச்சர் பண்றீங்களேடா' என புலம்பும் கடைக்குட்டிகளுக்குச் சமாதானம் சொல்லாமல், அவர்களது ஆதங்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
கலாய்ப்பது என முடிவெடுத்து விட்டால், 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என வேறுபாடே பார்க்க மாட்டார்கள் நம் மீமர்கள். கிடைத்த பந்தில் எல்லாம் சிக்ஸர் அடிப்பது போல், கிடைக்கும் கண்டெண்ட்டில் எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து விடுவார்கள்.

இப்போதும் அப்படித்தான் 90ஸ் கிட்ஸ்கள் பயன்படுத்திய அந்த கால பட்டன் போனில் இருந்து, அவர்கள் இப்போது வரை பயன்படுத்தும் வார்த்தைகள் வரை எல்லாவற்றையும் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதில் எக்ஸ்ட்ரா கண்டண்ட்டாக, அந்த காலத்தில் கடைக்குட்டிகளை மட்டுமே கடைக்கு அனுப்பும் கலாச்சாரத்தையும் விட்டு வைக்கவில்லை.
"கடைக்கு போறதுக்குனே பிறந்தவன்டா நீ.. அதனாலதான் உன்னை கடைக்குட்டினு கூப்டுறோம்!" என அதையும் ரசிக்கும் விதத்தில் மட்டுமல்ல, 'ஒரு வேள அப்டியும் இருக்குமோ' என யோசிக்கும் விதத்திலும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கத்தில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications