ஆடிமாதம்.. புதுமாப்பிள்ளைகளுக்கு ஒரு கவலைனா.. பழைய மாப்பிள்ளைகளுக்கு வேற மாதிரி கவலை!
ஆடி மாதம் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ஆடி மாதம் என கோயில்களில் திருவிழாக்கள் ஒருபுறம் களை கட்டிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் மனைவிகளை நினைத்து மீம்ஸ் போட்டு பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர் கணவன்கள்.


ஆடி மாதம் பிறந்து விட்டால், புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைத்து விடும் வழக்கம் நம் மாநிலத்தில் உள்ளது. இதை நினைத்து புதுமணத் தம்பதிகள் வருத்தத்தில் இருக்கிறார்கள் என ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படும். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக புதுமணத் தம்பதிகளுக்கு போட்டியாக திருமணமாகி ஓராண்டுக்கு மேலாகிய பழைய தம்பதிகளையும் சேர்த்துக் கலாய்த்துள்ளனர்.

'மனைவி ஒரு மாதம் அம்மா வீட்டிற்குப் போகிறாரே'.. என தனிமையை நினைத்து புது மாப்பிள்ளைகள் உருகுகிறார்கள் என்றால், 'என் மனைவியையும் இதே மாதிரி ஒரு மாசம் உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்களேன்.. புண்ணியமாப் போகும்..' என தனிமையை வேண்டி, பழைய மாப்பிள்ளைகள், அதாங்க மற்ற கணவன்மார்கள் பீல் செய்வதாகக் கூறுகின்றன இந்த மீம்ஸ்கள்.

கூடவே திருமணத்திற்குப் பிறகு மறந்தே போயிருந்த, ஆருயிர் நட்புக்களையெல்லாம் திரும்பவும் புது மாப்பிள்ளைகள் ஆடி மாதத்தில்தான் தூசி தட்டி எடுப்பார்கள் எனவும் கலாய்த்துள்ளனர்.
Recommended Video

இதோ ஆடி மாதம் பற்றிய இன்னும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications