நா சிவனேன்னு தானடா இருந்தேன்.. இப்ப என்னை வச்சி ‘என்னை’யவே கலாய்க்க வச்சிட்டீங்களே!
நடிகர் வடிவேலுவிற்கு போலியாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது தொடர்பாக கலாய்ச்சிபை மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: எல்லா மீம்ஸ்களுக்கும் பொருந்திப் போய், மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளின் முடிசூடா மன்னனாக வலம் வரும் வடிவேலு, தன் டெம்ப்ளேட்டுகளை வைத்து தன்னையே நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுவார்கள் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் இப்போது அப்படித்தான் மீமர்களிடம் வசமாய் சிக்கி இருக்கிறார் வடிவேலு.

வடிவேலு என்றொரு கலைஞன் உருவாகாமல் போயிருந்தால் கடந்த இரண்டு தலைமுறை மட்டுமல்ல.. இப்போது இருக்கின்ற, இனி வரப் போகிற பல தலைமுறையினர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என உறுதியாகச் சொல்லலாம். அந்தளவிற்கு எந்தவொரு சிச்சுவேசனிற்கும் பொருந்திப் போகிற மாதிரி காமெடிக் காட்சிகளைக் கொடுத்து, நம்மை இன்றளவும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர் வடிவேலு.

வடிவேலுவின் டெம்ப்ளேட்டுகள் இல்லையென்றால், மீம்ஸ் என்ற ஒன்றே இந்தளவிற்கு வளர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பது மாதிரி, இப்போது விதவிதமான டெம்ப்ளேட்டுகளைக் கொடுத்த வடிவேலுவையே மீம்ஸ் போட்டு கலாய்க்கிற நிலைமை மீமர்களுக்கு ஏற்பட்டு விட்டது சோகமான விசயம்தான்.

போலி டாக்டர் பட்ட விவகாரம் ஒருபுறம் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்ற வேளையில், வழக்கம்போல் அதையும் வடிவேலு பட டெம்ப்ளேட்டுகளை வைத்தே மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான வடிவேலுவின் டாக்டர் பட்டம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications