ராகுல்னு பேர் வச்சதால.. ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆகிட்டீங்க போல.. அப்டியா?
கிரிக்கெட் வீரர் ராகுலிடம் இருந்து துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளதை மையமாகக் கொண்டு நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: இந்திய அணியின் துணைக் கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டிருப்பது குறித்து கலவையான விமர்சனங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், சமூகவலைதளங்களிலும் அது பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் பல கலக்கி வருகின்றன.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்த கே.எல். ராகுல், சமீபகாலமாக தொடர்ந்து சரியாக விளையாடாமல் தடுமாறி வருகிறார். குறிப்பாக டெல்லியில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டில் 71 பந்துகளை சந்தித்த ராகுல் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். 2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 17 ரன்னும், 2ஆவது இன்னிங்ஸில் 1 ரன்னும் மட்டுமே எடுத்தார். இது கிரிக்கெட் ரசிகர்களை மேலும் அதிருப்திக்கு ஆளாக்கியது.
இந்நிலையில், தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு நீக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர் ராகுலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், கிரிக்கெட் வாரியத்தின் முடிவைப் பாராட்டி கிரிக்கெட் ரசிகர்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications