5.90 லட்சம் பேரா.. அப்போ தீபாவளிக்கு பெருங்களத்தூரை தாண்டவே நமக்கு எட்டு மணி நேரம் ஆகுமே சிவாஜி!
சென்னை: தீபாவளிக்கு இன்னும் சரியாக பத்து தினங்களே உள்ள நிலையில், இப்போதே மீம்ஸ் போட்டு கம்பெனிகளுக்கு மறைமுகமாக போனசை ஞாபகப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வரும் மக்கள், இப்போதே ஊருக்குச் செல்வது எப்படி, புதுத்துணி வாங்குவது எப்போது என பல்வேறு திட்டங்களை ரூம் போட்டு யோசித்து வருகின்றனர். முன்கூட்டியே பலர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து விட்டனர்.

வழக்கமாக தொடர் விடுமுறை நாட்களில் அலுவலகங்களில் விடுமுறை கிடைத்தால்கூட, பெருங்களத்தூரைத் தாண்டுவதுதான் அவர்களுக்கு சவாலாகதாக இருக்கும். காரணம் அந்தளவிற்கு டிராபிக்கில் வண்டிகள் வரிசை கட்டி நிற்கும். இந்த தீபாவளியும் அப்படித்தான் இருக்கும் என்பது டிக்கெட் முன்பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது.
அதனால் போனஸ் மீம்ஸ்களோடு, டிராபிக் மீம்ஸ்களையும் சேர்த்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். சைடுகேப்பில், இன்னமும் போனஸ் தராத கம்பெனிகளுக்கு இந்த மீம்ஸ்கள் வாயிலாக, மறைமுகமாக போனஸ் தருவதை ஞாபகப் படுத்தியும் வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










Click it and Unblock the Notifications
