கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் பார்த்தாச்சு.. இன்னும் போனஸ் தர மாதிரி இல்லையே!
தீபாவளி போனஸை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளியே வந்து விட்டது, ஆனால் இன்னமும் போனஸ் கைக்கு வந்தபாடில்லையே என்ற தங்களது ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு ஆற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னமும் இடையில் ஒருநாள்தான் இருக்கிறது. பண்டிகையைக் கொண்டாட ஊரையே காலி செய்து கொண்டு சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி விட்டனர் சென்னையில் பாதி மக்கள். மீதி இருப்பவர்களில் பாதி பேர், போனஸ் கைக்கு வந்ததும், ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகி வருகின்றனர்.
ஆனால் அவர்களது பொறுமையைச் சோதிப்பது போல், பல நிறுவனங்களில் இன்னமும் போனஸ் போட்டபாடில்லை போலும். எப்போது போனஸ் போடுவார்கள் என்ற தங்களது ஏக்கத்தை மீம்ஸ் போட்டு, சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications