இனி நமக்கு கல்யாணம் கனவுலகூட நடக்காது.. தங்கம் விலை உயர்வால் புலம்பும் 90ஸ் கிட்ஸ்!
தங்கம் விலை உயர்வு பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் தொட முடியாத அளவுக்கு தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை வைத்து ஆதங்கத்துடன் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

மற்ற நாடுகளைவிட இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தங்கம் மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. ஆடம்பரப் பொருளாக மட்டுமின்றி, ஒருவரின் பொருளாதாரத் தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய கருவியாகவும் தங்கம் உள்ளது. அதனால்தான் திருமணத்தில் மணமகளுக்கு போடப்படும் தங்கத்தின் அளவை தங்களது கௌரவப் பிரச்சினையாகப் பெற்றோர்கள் பார்க்கின்றனர்.

ஆனால் சமீபகாலமாக தங்கத்தின் விலை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே போனால் தங்கத்தை கண்காட்சிகளில் மட்டும்தான் ஏழை மக்கள் பார்க்க முடியும் போலிருக்கிறது. தங்கம் எட்டாக்கனியாகி வரும் இந்த ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வழக்கமாக மீம்ஸ்கள் என்றாலே காமெடியாக இருக்கும். ஆனால் தங்கம் விலை உயர்வு பற்றிய இந்த மீம்ஸ்களோ மக்களின் சோகத்தை பதிவு செய்வதாக உள்ளது. 'கவரிங் வாங்குவதற்கே வழி இல்லை.. இதில் இனி எங்கே தங்கம் வாங்குவது' என்பது போன்ற மீம்ஸ்கள் அடித்தட்டு மக்களின் பரிதாப வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில தங்கம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications