தல வாரும்போது கொட்டுனாகூட பரவாயில்ல.. டேபிள்ஃபேன் பக்கத்துல உட்கார்ந்தாக்கூட கொட்ரியேடா!
சென்னை : ஒவ்வொருவருக்கும் தலைக்கு மேல் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அதில் தலையாயது இந்த முடி கொட்டும் பிரச்சினைதான் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
அந்தக் காலத்தில் வயதானாலும் இயற்கையான கருமை நிறக் கூந்தலுடன் வாழ்ந்தனர் நம் தாத்தா, பாட்டிகள் என வீட்டில் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், நமது காலத்தில் இளமையிலேயே நரை வர ஆரம்பித்து விட்டது. சரி, நரைதானே டை அடித்து மறைத்துக் கொள்ளலாம் என நினைத்தால், முடி இருந்தால்தானே டை அடிப்பாய் என முடியும் கொட்டத் தொடங்கி விடுகிறது.
நம் வாழ்க்கைச்சூழல், சாப்பாட்டு முறை, தூக்கமின்மை, சந்தையில் விற்கப்படும் விதவிதமான ஷாம்பூக்கள், இவையெல்லாவற்றிற்கும் மேலாக நமது மன அழுத்தம் என முடி கொட்டுவதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதனாலேயே ஒவ்வொருவரும் தங்களது தலைக்கு மேல் உள்ள ஆயிரம் பிரச்சினைகளில், முடி கொட்டுவதைத்தான் பெரிய பிரச்சினையாக நினைத்துக் கவலைப்படுகின்றனர்.
கூடவே, இந்த முடி கொட்டும் பிரச்சினையை வைத்து, தங்கள் ஸ்டைலில் விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து, தங்கள் கவலைகளையும் தீர்த்துக் கொள்கின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில முடி பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications