பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காதுங்கறது பழசு.. இப்போலாம் பொய் சொன்னாதான் போஜனமே கிடைக்குது!
கணவன் - மனைவி சண்டை பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: சமூகவலைதளங்களில் எப்போதுமே சலித்துப் போகாத டாபிக் என்றால், அது கணவன் - மனைவி பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் தான்.

கணவன்மார்கள் மனைவி பற்றி விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்வதும், மனைவிமார்கள் கணவர்களைப் பற்றி கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்வதும் சமூகவலைதளங்களில் ஒன்றும் புதிதல்ல.. வீட்டில் பிரச்சினையோடு வரும் யாரோ ஒருவர், லைட்டாக கொளுத்திப் போட்டாலே போதும். 'நீ பற்ற வைத்த நெருப்பொன்று..' என மீம்ஸ்கள் பற்றி எரிய ஆரம்பித்து விடும்.

இப்போதும் அப்படித்தான் மனைவியையும், அவரது சமையலையும் கலாய்த்து விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுனு சொல்வாங்க.. இப்போ மனைவி சமையல் நல்லாயிருக்குனு பொய் சொன்னாதான் அடுத்தவேளைக்கு ரசம் சாதமாவது கிடைக்கும்..' என்பது மாதிரியான மீம்ஸ்கள் பிராக்டிகலாக ரசிக்கும்படி உள்ளன.

ஓவராக சமையல் செய்து டார்ச்சர் செய்கிறார் என்பது மாதிரியான மீம்ஸ்களுக்கு மத்தியில், 'என் மனைவி அடிக்க வந்தா சமையல்கட்டுக்குள்ள ஓடிடுவேன்.. ஏன்னா அங்க தான் அவங்க வரவே மாட்டாங்க..' என்பது மாதிரியான மீம்ஸ்களும் கலகலக்க வைக்கின்றன.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும், கணவன், மனைவி புலம்பல்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














Click it and Unblock the Notifications