‘நீங்க செய்றதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சீங்களா?’.. ஒரே ஒரு கேள்விதான் கேட்டா.. சோலி முடிஞ்சு !
சென்னை : கணவன் - மனைவிக்கு இடையான மீம்ஸ்களுக்கு எப்போதுமே இணையத்தில் தனி வரவேற்பு உண்டு. அதனால்தான் அடிக்கடி அப்படியான செல்ல சண்டை மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆகி விடுகின்றன.
“வீட்டுல எலி வெளில புலி”.. இது நம்மூரில் நிறைய கணவர்களுக்குப் பொருந்தும். வீட்டில் மனைவி தங்களைக் கொடுமைப் படுத்துவதாக கணவர்கள் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் கணவர்கள் தங்களை கொடுமைப் படுத்துவதாக மனைவிகளும் புலம்பத்தான் செய்கின்றனர். இதில் யார் சொல்வது எந்தளவுக்கு உண்மை என்பதையெல்லாம் ஆராயாமல், இதனையும் தங்களது மீம்ஸ்களுக்கு கண்டெண்ட் ஆக்கி விடுகின்றனர் நம் மீமர்கள்.

அதனால்தான் அடிக்கடி, கணவன் - மனைவிக்கு இடையே வரும் செல்ல சண்டைகளைப் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. அதிலும், மனைவிக்கு பயந்தது மாதிரி, கணவர்கள் பகிரும் மீம்ஸ்களுக்கு வரவேற்பு ரொம்பவே அதிகம்.
இப்போதும் அப்படித்தான், “'நீங்க செய்றதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சீங்களா?’.. ஒரே ஒரு கேள்விதான் கேட்டா.. சோலி முடிஞ்சு !” என்றும், “கணவன், மனைவி பிரச்சினைய வச்சி புதுசா ஒரு படம் பண்றேன்.. பேரு 'விடமுயற்சி’!” என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications