ஹக் டே, கிஸ் டே, லவ்வர்ஸ் டேலாம் கொண்டாடினா.. கடைசில மிஸ்ஸிங் டே தான் கொண்டாடணும்!
மிஸ்ஸிங் டேவை வைத்து கலகலப்பான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: எந்த கொண்டாட்டமாக இருந்தாலும் மீம்ஸ் போட்டே ஆக வேண்டும் என்ற உறுதியில் இருக்கும் நம் மீமர்கள், மிஸ்ஸிங் டேவை மட்டும் விட்டு வைப்பார்களா? விதவிதமான மீம்ஸ்களால் இணையத்தை திணறடித்து விட்டனர்.
பிப்ரவரி மாதம் என்றாலே காதலுக்கு பஞ்சமே இருக்காது. சரியாக மாதத்தின் நடுவில் காதலர் தினம் வருவதால், அதன் முதல் வாரத்தையும் சரி, அடுத்து வரும் நாட்களையும் ஏதாவது ஒரு பெயரில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள். சமயங்களில் இன்று என்ன தினம் கொண்டாடப்படுகிறது என்பதே சமூகவலைதளத்தை திறந்து பார்த்தால்தான் நமக்கே தெரிய வரும்.
அப்படித்தான் சத்தமில்லாமல் கொண்டாடப்பட்ட மிஸ்ஸிங் டேவை வைத்து, சமூகவலைதளங்களில் சத்தமாக வாய் விட்டு சிரிக்கும்படியான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் மீமர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில காமெடியான மீம்ஸ்கள் உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications