ஆரோக்கிய வாழ்க்கைக்கு தூக்கம் ரொம்ப முக்கியம்.. நைட்டு 1 மணிக்கு யூடியூப்ல பார்த்தேன்!
சென்னை : மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை எனும் நிலையில், மொபைல் போனை வைத்துக் கொண்டு நம் மக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
சமயங்களில் கலாய்ப்பது மாதிரியே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நம் நெட்டிசன்கள் கில்லாடிகள். எப்படிச் சொன்னால் மக்களை நல்ல செய்திகள் சென்றடையும் என்பதைத் தெரிந்தவர்கள். அதனால்தான், மீம்ஸ் வழியாக மொபைல் போனுக்கு நாம் எப்படியெல்லாம் அடிமையாகிக் கிடக்கிறோம் என்பதை தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

உதாரணத்திற்கு, "ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் ரொம்ப முக்கியமாம்.. நைட்டு 1 மணிக்கு யூடியூப்ல பார்த்தேன்!" என்ற மீம்ஸில், நல்ல செய்திகளை நாம் செல்போனில் பார்த்தாலும்கூட, அதனை சரிவரப் பின்பற்றுவதில்லை என்பதை நாசூக்காக சொல்லியிருக்கின்றனர். அதோடு, வெறும் தத்துவங்களாகவும், அறிவுரைகளாகவும் மட்டும் இருந்தால் போரடித்து விடும் என, வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில், "மரியாதைக்கு நல்லா இருக்கியானு கேட்டா.. ரூ.100க்கு ரீசார்ஜ் பண்ண சொல்றா.. இன்னும் அவ திருந்தல போல!" என்பது மாதிரியான மீம்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான செல்போன் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications