மாசக்கடைசினாலே நாக்கு தள்ளும்.. இது வருடக்கடைசி வேற.. உள்நாக்கு வரைக்கும் தள்ளுது!
சென்னை : சாதாரணமாக மாதக்கடைசி என்றாலே மீம்ஸ் போட்டு புலம்பும் நம் மக்கள் வருடக்கடைசியை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன... விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து 2024ம் ஆண்டிற்கு ஃபேர்வெல் கொடுத்து வருகின்றனர்.
என்னதான் திங் பாசிட்டிவ் என சமூகவலைதளங்களில் ஆயிரத்தெட்டு ரீல்ஸ்களைப் பார்த்தாலும், மக்களுக்கு தங்களது சொந்தப் பிரச்சினையை நினைத்தால், இருகோடுகள் தத்துவத்தில் அதுதான் பெரிதாகத் தெரிகிறது. அதனால்தான் எந்தப் பிரச்சினை என்றாலும் உடனே அதனைப் பற்றி புலம்பித் தீர்த்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக மீம்ஸ்கள் என்பது அவர்கள் புலம்புவதற்கு கிடைத்த புதிய கருவியாகி விட்டது.

அதிலும் குறிப்பாக கடந்தாண்டு.. இல்லையில்லை இந்தாண்டு துவக்கத்தில், 2024 தங்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்யும் என எதிர்பார்த்து, அவை எதுவும் நிறைவேறாத கோபத்தில் இருப்பவர்கள், தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு அதனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“இதெல்லாம் 2024ல நல்லது நடக்கும்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து.. மொத்தமா ஏமாந்து போனவங்க லிஸ்டு சார்!”, என்றும், “மாசக்கடைசினாலே நாக்கு தள்ளும்.. இது வருடக்கடைசி வேற.. உள்நாக்கு வரைக்கும் தள்ளுது!” என்றும் விதவிதமான மீம்ஸ்களால் இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









Click it and Unblock the Notifications
