பூனை போட்றா பாட்ட.. வர்மனுக்கா போட பாத்த லாக்கு.. இப்ப ஆனியா ஷாக்கு... புரட்டாசி அசைவம் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

புரட்டாசி மாதம் முதல் நாள் இன்று தொடங்கி உள்ளது. செப்டம்பர் 18ம் தேதியான இன்று தொடங்கி அடுத்த மாதமான அக்டோபர் 17ம் தேதி வரை பலர் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடைகளில் அலைமோதிய கூட்டம், இன்னும் ஒரு மாதம் இருக்காது. இந்நிலையில் புரட்டாசி பிறந்ததையொட்டி அசைவம் குறித்த மீம்ஸ்கள் வெளியாகி உள்ளது.

புரட்டாசி மாதம் பிறந்தாலே பலர் அசைவம் சாப்பிட மாட்டார்கள். கால நிலை மாற்றம், சற்று வித்தியாசமாக இந்த மாதத்தில் இருக்கும் என்பதால் இந்த வழக்கம் நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விரதம் என்று அன்று அசைவம் சாப்பிட மாட்டார்கள், இன்னொரு பக்கம், பெருமாளை குலதெய்வமாக வணங்குபவர்கள் சனிக்கிழமை அசைவம் சாப்பிட மாட்டார்கள்.

funny memes collection on purattasi month start today, see the purattasi non veg memes

சாய் பாபாவை பக்தர்களாக கொண்டவர்கள் வியாழக்கிழமை அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதேபோல் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் என்று செவ்வாய் அன்றும் அசைவம் சாப்பிட பலர் மறுப்பார்கள். பொதுவாக அசைவம் சாப்பிடும் நாட்கள் என்றால், ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாட்கள் தான் இருக்கும். சிலர் எல்லா நாட்களிலும் அசைவம் சாப்பிடுவார்கள். அது அவர்கள் விருப்பம்.

பொதுவாக பெரும்பாலும் புதன் மற்றும் ஞாயிறுகளில் அசைவம் சாப்பிடுவார்கள். குறிப்பாக ஞாயிறு அன்று விடுமுறை என்பதால், அசைவ பிரியர்கள் அனைவருமே அன்று அசைவம் எடுத்து சாப்பிடுவார்கள். சிலருக்கு முட்டை இல்லாமல் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட பிடிக்காது.

சாம்பார் என்பது வெள்ளிக்கிமையை தவிர வேறு எந்த நாளும் இருக்காது. அன்று கூட முட்டை கண்டிப்பாக வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த சூழலில் புரட்டாசி பிறந்திருப்பதால் பலரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஐப்பசி பிறந்தால் தான் அசைவம் சாப்பிடுவார்கள்.

அதில் இந்த வருடம் ஒரு விஷேசம் என்னவென்றால், புரட்டாசி முதல் நாளில் எப்படி விநாயகர் சதுர்த்தி வந்ததோ, அதுபோல், ஐப்பசி பிறக்க இரண்டு நாள் முன்பே நவராத்திரி ஆரம்பம் ஆக உள்ளது. எனவே அசைவ பிரியர்கள் செப்டம்பர் 18ம் தேதியான இன்று தொடங்கி விஜயதசமி நாளான அக்டோபர் 24ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

அக்டோபர் 25ம் தேதிக்கு பிறகே அசைவ பிரியர்கள் இயல்பாக அசைவம் சாப்பிடுவார்கள். அசைவ பிரியர்கள் கிட்டத்தட்ட 38 நாட்கள் அசைவம் சாப்பிட முடியாத நிலையை, மீம்ஸ் போட்டு வருகிறார்கள். குறிப்பாக ஜெயிலர் படத்தில் வரும் வர்மன் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் தாருமாறான மீம்ஸ் ஆக உள்ளது. மீம்ஸ் தொகுப்புகளை பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+