இப்டி கேப்பே விடாம கொட்டிட்டு இருந்தா என்ன சார் அர்த்தம்.. மனசாட்சியே இல்லையா?
சென்னயில் இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையை வைத்து, மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டதால், சென்னை மக்கள் ஒருபுறம் மழை, வெள்ள பீதியில் இருக்க, வழக்கம்போல் இந்த மழையையும் மீம்ஸ் போட்டு கொண்டாட ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

நவம்பர் மாதம் வந்துவிட்டாலே, சென்னைவாசிகளுக்கு சொல்ல முடியாத ஒரு பயம் மனதிற்குள் வந்து தானாகவே புகுந்து கொள்ளும். காரணம் மழை. 2015ம் ஆண்டு கொட்டித் தீர்த்த மழையால் சென்னையே தத்தளித்ததை இப்போதும் மக்கள் மறக்கவில்லை. அதனால்தான் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டாலே, 'இந்த முறை நம்மை எப்படி வச்சி செய்யக் காத்திருக்கிறதோ?' என்ற பீதி சென்னை மக்களுக்கு வந்து விடும்.

என்னதான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சின்ன மழைக்கே பல சாலைகள் ஆறாக மாறுவதை தவிர்க்க முடிவதில்லை. சில மணி நேரங்களில் அந்த நீர் வடிந்து விட்டாலும், இல்லை வடிய வைக்கப்பட்டாலும் சரி, அதுவரை அந்த சாலையில் செல்வது சாகசமான ஒன்றுதான்.

அதுவும் இந்தாண்டு நவம்பர் மாதம் ஆரம்பிப்பதற்கு முதல்நாளே, 'இதோ வந்துட்டேன்...' என பிரண்ட்ஸ் பட வடிவேலு மாதிரி, ஓடி வந்த மழை, எல்லோரையும் உருட்டி எடுக்க ஆரபித்து விட்டது. அப்போது ஆரம்பித்த மழை, இன்னமும் சென்னையில் நின்றபாடில்லை. நீர்நிலைகள் நிரம்பி வருவதாக வெளியாகும் தகவல்கள் வேறு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

இப்படியாக சென்னை மக்கள் ஒருபுறம் மழை மற்றும் வெள்ள பீதியில் இருக்க, வழக்கம்போல் இந்த மழையையும் மீம்ஸ் போட்டு வரவேற்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். சென்னையின் மழைக்கால வாழ்க்கையை மீம்ஸாக அழகாக அவர்கள் தொகுத்திருப்பது ரசிக்கும்படி உள்ளது.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட மழை பற்றிய சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...



-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications