தங்கச்சின்னா சும்மா இல்ல.. ஒரு தங்கச்சிய சமாளிக்கறது.. ஊரையே சமாளிக்கிறதுக்கு சமம்!
ரக்ஷாபந்தனையொட்டி சகோதர, சகோதரிகளைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: ரக்ஷாபந்தன் ஸ்பெஷலாக இன்றே சகோதர, சகோதரிகளின் செல்லச் சண்டைகளைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

குழந்தைகள் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாகத்தான் இருக்கும். அதுவும் ஒரு வீட்டில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் கேட்கவே வேண்டாம், நிச்சயம் ஒரே ரகளையாகத்தான் இருக்கும். பாசம் உள்ளே இருந்தாலும், எதற்கெடுத்தாலும் சண்டை என பெற்றோரின் மண்டையை உடைக்காமல் விட மாட்டார்கள்.

இதில் வயது வித்தியாசம் எல்லாம் எதுவும் கிடையாது. எவ்வளவு வளர்ந்தாலும் உடன்பிறந்தவர்கள் உடன் சண்டை போடுவது, போட்டி போடுவது என்பது மகிழ்ச்சியான விசயம்தான். முன்பெல்லாம் ரக்ஷாபந்தன், சகோதரிகள் தினம், சகோதரர்கள் தினம் என எதாவது உடன்பிறப்புகள் தினமென்றால், வீட்டில் எப்படி இருந்தாலும், சமூகவலைதளங்களில் சம்பிரதாயத்திற்காவது, 'உன்கூடவே பிறக்கணும்.. உனக்காகவே இருக்கணும்..' என அன்பில் பொங்கி வழிவார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் நிலைமையே தலைகீழ். சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களுக்கு இணையாக கலாய்ச்சிப்பை மீம்ஸ்களும் நிரம்பி வழிகின்றன. 'நீயெல்லாம் ஒரு அண்ணனா/தங்கச்சியா.. ஒரு ரிமோட் கேட்டாவே தர மாட்டேங்குற..' என குடும்ப ரகசியங்களையெல்லாம் கூட பொதுவெளியில் போட்டு உடைத்து விடுகிறார்கள். அதற்கு மீம்ஸ் ஒரு கருவியாகி விடுகிறது.

இப்போதும் அப்படித்தான்.. ரக்ஷாபந்தன் நாளைக்குத்தான் என்றாலும்.. இன்றே சமூகவலைதளங்களில் சகோதர, சகோதரிகள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகம் உலா வர ஆரம்பித்து விட்டன. அதில் பல மீம்ஸ்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் செல்லச் சண்டைகள் என்பதால், ரொம்பவே ரசிக்கும்படி உள்ளன இந்த மீம்ஸ்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications