ரம்ஜான் வாழ்த்துகள் பாய்.. பிரியாணிய பார்சல் பண்ணிக் குடுக்க மறந்துடாதீங்க!
சென்னை: ரம்ஜான் ஸ்பெஷலாக இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்துகளோடு, சூசகமாக பிரியாணியும் கேட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் குறும்புக்கார நெட்டிசன்கள்.
தூக்கத்தில் எழுப்பிக் கொடுத்தாலும் பிரியாணியை மூக்கு முட்ட சாப்பிடும் அளவிற்கு நம்மூரில் பிரியாணி பிரியர்கள் அதிகம். என்னதான் கடையில் காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட்டாலும் சரி, தாங்களே வீட்டில் சமைத்துச் சாப்பிட்டாலும் சரி, அது நிச்சயமாக இஸ்லாமிய நண்பர்கள் ரம்ஜானுக்கு அன்போடு தரும் பிரியாணிக்கு என்றுமே ஈடாகாது. அந்தளவிற்கு அதில் சுவையோடு, அன்பும், பாசமும் கலந்திருக்கும்.

அதனாலேயே ரம்ஜான் வந்து விட்டால், கூச்சம், வெட்கம் போன்றவற்றையெல்லாம் வீட்டிலேயே வைத்து விட்டு, உரிமையாக கையில் ஒரு தூக்குச் சட்டியோடு பிரியாணி வாங்க நண்பர்கள் வீட்டிற்கு சென்று விடுவார்கள் நம்மவர்கள். அந்தளவிற்கு பிரியாணி காதலர்களான நம் நெட்டிசன்களுக்கு ரம்ஜானும் அதுவுமாக பிரியாணி தராமல் விட்டால் சும்மா இருப்பார்களா?
அதனால்தான் மீம்ஸ் போட்டு தங்களுக்கு பிரியாணி தராத அன்பர்களுக்கு அதனை சூசகமாக சுட்டிக்காட்டி வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். பிரியாணி கிடைக்காத ஏக்கத்தில் ரொம்பவும் புதிதாக சிந்திக்க முடியவில்லை போலும், பகிரப்படும் பல மீம்ஸ்கள் போன வருடம் பகிரப்பட்டவை. அவற்றை மீண்டும் சூடு படுத்தி இந்தாண்டு பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களை கமகமக்க வைத்து வரும் சில நகைச்சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications