1ம் தேதி பொறந்தா வாடகை தரணுமா.. நல்லவேளைய்யா.. நா 6ம் தேதிதான் பொறந்தேன்!
சென்னை: ஜூலை முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்து விட்டதையும், பல நிறுவனங்களில் இன்றுதான் சம்பள நாள் என்பதையும் வைத்து, 'கூட்டிக் கழித்துப் பாருங்கள்.. கணக்கு சரியா வரும்' என்ற ரேஞ்சுக்கு விதவிதமான மீம்ஸ்களால் சமூகவலைதளங்களை நெட்டிசன்கள் கலக்கி வருகின்றனர்.

பண்டிகைகளை கான்செப்ட்டாக வைத்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருந்த நம் மீமர்கள், இப்போது மாதங்களையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு மாதத்தையும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளி விடுகின்றனர். ஆகஸ்ட் மாதமும் அதற்கு விதிவிலக்கல்ல..

பல நிறுவனங்களில் மாதத்தின் முதல் தேதி தான் சம்பள நாள். ஆனால், 'கையில வாங்கினேன் பையில போடல.. காசு போன இடம் தெரியல..' என சம்பளம் வருவதும் சரி, காலியாவதும் சரி தெரிவதேயில்லை. அந்தளவிற்கு இஎம்ஐக்களால் நிறைந்திருக்கிறது சம்பளக்காரர்களின் வாழ்க்கை என ஆகஸ்ட் மாதத்தை தத்துவம் + புலம்பல் மீம்ஸ்களால் வரவேற்று வருகின்றனர் நெட்டிசன்கள்.

சம்பளம் கையில் கிடைத்தவுடன், 'அந்த தெரு என்ன விலைனு கேளு.. இந்த ஊரு என்ன விலைனு கேளு... அய்யோ எனக்கு ஏதாவது வாங்கியே ஆகணுமே' என மகிழ்ச்சியில் குதிப்பவர்கள், ஓரிரு நாட்களிலேயே சம்பளப் பணம் காலியானதும், 'கடன் வாங்கவே நொடிகள் போதுமே.. கடனைத் திருப்பி அடைக்கவே யுகங்கள் ஆகுமே..' என பஞ்சப்பாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள் என்பது போன்ற யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications