சூரியன் 149,600,000 கிமீ அங்கிட்டு தான இருக்கு.. எனக்கென்னவோ எங்க மாடில இருக்க மாதிரியே இருக்கு!
வெயில் கொடுமைகளைப் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: கொளுத்தும் வெயிலைப் பற்றி குளுகுளு ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வெளியில் தலை காட்ட முடியாதபடிக்கு இப்போதே வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது. நிஜமாகவே சூரியன் வானத்தில்தான் இருக்கிறதா அல்லது நமது வீட்டு மொட்டை மாடியில் இருக்கிறதா என சந்தேகப்பட வைக்கும் அளவிற்கு, வீடுகளும் வெப்பமாகத்தான் இருக்கின்றன. போதாக்குறைக்கு வேர்வை வேறு லிட்டர் லிட்டராக சுரந்து கசகசக்க வைத்து விடுகிறது.

கதவைத் திறந்து வைத்தால் காற்று வரும் என்ற நிலை மாறி, அனல் காற்றுதான் அடிக்கிறது. இதனாலேயே பல வீடுகளில் பகல் நேரத்திலேயே ஏசியைப் பயன்படுத்துகிறார்கள். கதவைத் திறந்து வெளிக்காற்று வராவிட்டாலும் பரவாயில்லை, ஏசி காற்று வெளியில் சென்று விடக் கூடாது என அறைக் கதவுகள் பூட்டப்பட்டே கிடக்கின்றன.

இப்படியாக வெயில் படுத்தும் கொடுமைகளை வைத்து ஜாலியாக மீம்ஸ்கள் செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் சில உங்களுக்காக...












Click it and Unblock the Notifications