காலைல பூரி கேட்டதுக்கே கட்டையால அடிச்சிட்டா.. டின்னருக்கு சப்பாத்தி எப்டி கேட்குறது?
சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களால் இணையத்தை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே விதவிதமாக சாப்பாடு சாப்பிட்டாக வேண்டும் நம் நெட்டிசன்களுக்கு. அதுவும் அசைவப் பிரியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆடு, கோழி, முட்டை என எல்லாமும் இலையில் இருந்தாக வேண்டும். அதேபோல், சமூகவலைதளப் பக்கங்களில் சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் இருக்க வேண்டும்.

இந்த ஞாயிறும் அதற்கு விதிவிலக்கல்ல.. வழக்கம் போல் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆவதற்குள், விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, இணையத்தை கமகமக்க வைத்துள்ளனர். கூடவே சாப்பிடும் போது ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றியும், சைடுகேப்பில் புலம்பியுள்ளனர்.
“என்னென்னமோ கண்டுபிடிக்குறாங்க.. இந்த இலைல ரசம் ஓடாம இருக்க ஏதாவது ஒரு கருவி கண்டுபிடிக்குறாங்களா?” என்றும், “காலைல பூரி கேட்டதுக்கே கட்டையால அடிச்சிட்டா.. டின்னருக்கு சப்பாத்தி எப்டி கேட்குறது?” என்றும் சொந்தப் பிரச்சினைகளையும் ரசிக்கும்படி மீம்ஸ்களாக்கியுள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications