போனவாரமே கறி கேட்டதுக்கு கழுவி கழுவி ஊத்துனாங்க.. இன்னைக்கு என்ன பண்றாங்களோ?
ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கறி எடுக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை.. ஒரு கறிக்குழம்பு மீம்ஸாவது போடாவிட்டால் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமே ஆகாது.

அசைவப் பிரியர்களைப் பொறுத்தவரை ஞாயிறு என்பது கறி விருந்துக்கான நாள். அன்றைய தினம் ஏதாவது காரணத்துக்காக சாம்பார் அல்லது ரசம் வைத்து விட்டால் அவ்வளவுதான். சிலர் வீட்டில் பொங்குவார்கள்.. சிலர் இணையத்தில் புலம்புவார்கள். இன்னும் சிலரோ வயிறாற கறி விருந்தை ஒரு பிடி பிடித்து விட்டு, சாம்பார் சாப்பிட்டமாதிரி, சமூகவலைதளங்களில் பில்டப் கொடுப்பார்கள்.

இந்த வாரமும் இந்த பழக்கத்தை மறக்காமல் கடைபிடித்துள்ளனர் நெட்டிசன்கள். வழக்கம் போலவே விதவிதமான பிரியாணி, கறிக்குழம்பு மீம்ஸ்காக மணமணத்துக் காணப்படுகிறது சமூகவலைதளங்கள். கூடவே, தூங்க முடியவில்லை, முடிவெட்ட முடியவில்லை என்ற இல்லைகளுக்கும் பஞ்சமில்லை.

இதோ அப்படியாக ஞாயிற்றுக்கிழமைகள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...







Click it and Unblock the Notifications
