புதுக்கோட்டை அப்பத்தா எப்படா ப்ரைடு ரைஸ் கிண்டுச்சு.. உங்க அலம்பலுக்கு அளவே இல்லையாடா?
ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் அசைவ உணவு மீம்ஸ்களுக்குப் பதிலாக, உப்புமா, புளிசாதம் என சைவ உணவு மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
சென்னை : ஒருவழியாக புரட்டாசி மாதம் முடிந்து விட்டது, விதவிதமான அசைவ உணவுகளை வீட்டில் சமைப்பதுபோல் சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களாக பகிர்வார்கள் என எதிர்பார்த்தால் ஏமாற்றி விட்டார்கள் நம் நெட்டிசன்கள். புளிசாதம், உப்புமா என சைவ மீம்ஸ்களாகப் பகிர்ந்து, இன்னும் நாங்கள் புரட்டாசியில் இருந்து வெளியில் வரவில்லை என கலகலக்க வைத்துள்ளனர் நெட்டிசன்கள்.

தமிழ் மாதங்களிலேயே நம் அசைவ உணவுப் பிரியர்களுக்குப் பிடிக்காத மாதமென்றால் அது புரட்டாசிதான். அதிலும் மற்ற நாட்களைவிட, அம்மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையைக் கடப்பதுதான் அவர்களுக்கு கடினமான செயல். அதனால், புரட்டாசி மாதம் வீட்டில் அசைவம் சமைக்க முடியாத கவலையை, மீம்ஸ்களாக இணையத்தில் புலம்பி தீர்த்து விடுவார்கள்.
ஒருவழியாக, பல்லைக் கடித்துக் கொண்டு, எப்படியோ புரட்டாசி மாதத்தைக் கடந்து விட்டனர். புரட்டாசி மாதம் முடிந்து வரும் முதல் ஞாயிறு என்பதால், இந்த ஞாயிறு ஒரு மாதம் சாப்பிடாததற்கும் சேர்த்து வைத்து, விதவிதமாக அசைவ உணவுகளை சமைத்து அசத்தி விட்டனர் போலும் மக்கள். அதனாலேயே வாட்சப் ஸ்டேட்டஸ்களில் அவர்களது வீட்டு மெனுதான் பெரும்பாலும் இடம் பெற்றிருந்தது.
சரி, அதேபோல் மீம்ஸ்களிலும் அசைவ மணம் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்த்தால், எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என பிக் பாஸ் ரேஞ்சுக்கு மீம்ஸ்களில் வழக்கம் போல் சைவ நெடிதான் தூக்கலாக உள்ளது. அதிலும் பலர் இன்னமும் புரட்டாசி மாதத்தில் இருந்து வெளியில் மீண்டு வரவில்லை என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே புரிகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications