கத்தரிகாய், முருங்கைக்காய் போட்டு மணக்க மணக்க.. கருவாட்டு குழம்பா.. அதான் இல்ல பருப்பு சாம்பாரு!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக வழக்கம் போல் இந்த வாரமும் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் விதவிதமாகச் சமைக்கிறார்களோ இல்லையோ, சமூகவலைதளங்களில் விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களால் கமகமக்க வைத்து விடுகின்றனர் சாப்பாடு பிரியர்கள். அதிலும் புரட்டாசியைக் காரணம் காட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அசைவம் சாப்பிட முடியாமல் இருந்தவர்கள் பலர் கடந்த வாரத்தோடு விரதத்தை முடித்துக் கொண்டனர்.

ஆனால், நவராத்திரியால் போன வாரமும் அசைவம் சாப்பிட முடியாதவர்கள், இந்த வாரம்தான் அசைவத்தை மீண்டும் ருசி பார்த்துள்ளனர். எனவே, தங்களது மகிழ்ச்சியை விதவிதமான மீம்ஸ்களால் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வாரமும் அசைவம் சாப்பிட முடியாமல் போனவர்கள், தங்களது ஆதங்கத்தையும், புலம்பல்களையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். எது எப்படியோ விதவிதமான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களால் நிறைந்து கிடக்கிறது இணையம்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications