என்னதான் டிஎன்பிஎஸ்சி எக்ஸாமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. இப்டியெல்லாமா கேள்வி கேட்பீங்க?
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: அரசு வேலை கிடைக்கும் வரை மீம்ஸ் போட்டு பொழுதைக் கழிப்போம் என நினைத்து விட்டார்களோ என ஆச்சர்யப்படும் அளவிற்கு டிஎன்பிஎஸ்சி பற்றிய மீம்ஸ்கள் புதிது புதிதாகப் பகிரப்பட்டு வருகின்றன.
ஒரு விசயத்தைக் கலாய்க்க வேண்டும் என முடிவு செய்து விட்டால், இந்த மீமர்களுக்கு எங்கு இருந்துதான் இவ்வளவு கற்பனை வளம் வருமோ தெரியவில்லை. அருவி மாதிரி மீம்ஸ்களைக் கொட்ட ஆரம்பித்து விடுகின்றனர். சில கண்டெண்ட்டுகள் எவ்வளவு மீம்ஸ் போட்டாலும் தாக்குப் பிடிக்கும்.
நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வும் அப்படிப்பட்டது தான். நேற்று காலையில் தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்பு, தேர்வர்களைக் கலாய்க்க ஆரம்பித்த மீமர்கள், இன்னமும் நிறுத்தியபாடில்லை. விட்டால் ஒரு புத்தகமே போட்டு விடலாம் போல.. அந்தளவிற்கு சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே புதிது புதிதாக மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளத்தில் ரசிக்கும்படி பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications